தனது புதிய சாதனங்களை 3 கட்டங்களாக அறிமுகம் செய்யும் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
22Shares

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்கள் உட்பட மேலும் சில சாதனங்களை இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சற்று பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 கட்டங்களாக தனது 2020 ஆம் ஆண்டிற்கான சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நொவெம்பர் மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ஆப்பிள் கடிகாரம் மற்றும் ஐபேட்டினை செப்டெம்பர் மாதத்திலும், ஐபோன் 12 சாதனத்தினை ஒப்டோபர் மாத்திலும், iPhone 12 Pro சாதனத்தினை நொவெம்பர் மாத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது.

இது தொடர்பாக Jon Prosser என்பவர் டுவிட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்