இந்தியாவில் அறிமுகமாகியது Samsung Galaxy M51 கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy M51 இனை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவுடையதும், Super AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 730 mobile processor, 6GB RAM, 128GB சேமிப்பகத்துடனும், 8GB RAM, 128GB சேமிப்பகத்துடனும் இரு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியில் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள், தலா 5 மெகாபிக்சல்கள் உடைய இரு கமெராக்கள் என மொத்தம் 4 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 340 டொலர்களாக காணப்படுகின்றது.

இந்திய நாணயப் பெறுமதியில் 24,999 ரூபாய்கள் ஆகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்