கூகுள் தேடலில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

இணையத் தேடலில் முன்னணி வகிக்கும் தேடுபொறியாக கூகுள் விளங்குகின்றது.

விரைவாக செயற்படுவதுடன், பல இலகுவான அம்சங்கள் தரப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் கூகுள் தேடலில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உட்புகுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் தட்டச்சு செய்யும்போது சொற்களில் ஏற்படும் வழுக்களை தானாகவே திருத்தக்கூடியதாக இருக்கும்.

இதனால் தவறான தேடுதல்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இச் செயற்பாடானது வெறும் 3 மில்லி செக்கன்களில் நடைபெறக்கூடிய வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம் மாற்றமானது கடந்த 5 வருடங்களில் இல்லாத ஒரு புதிய அனுபவத்தினை பயனர்களுக்கு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்