A15s கைப்பேசியின் உயர் சேமிப்பு தகைமை கொண்ட பதிப்பு அறிமுகம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares

சீனாவை தளமாகக் கொண்ட ஒப்போ நிறுவனமானது ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் சிறந்து விளங்குகின்றது.

இந்த நிறுவனமானது கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது விற்பனையை விரிவாக்கம் செய்திருந்தது.

இப்படியான நிலையில் அண்மையில் A15s எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் தற்போது இதன் மற்றுமொரு பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது A15s கைப்பேசியில் அதிக கூடிய சேமிப்பு தகமையை உள்ளடக்கி மீள் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி குறித்த கைப்பேசியானது முன்னர் 4GB RAM, 64GB சேமிப்பு கொள்ளளவுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது RAM அளவினை மாற்றாது சேமிப்பு தகைமை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதன்படி 128GB சேமிப்பகத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.52 அங்குல அளவுடைய தொடுதிரை, 13 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என 3 பிரதான கமெராக்களை கொண்டுள்ளது.

அத்துடன் 8 மெகாபிக்சல்களை உடைய செல்பி கமெராவும் தரப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்