சுண்டு விரல் சைஸ் போதும்.. உங்க ரகசியத்தை சொல்லிவிடலாம்

Report Print Printha in வாழ்க்கை முறை

தென்கொரியாவில் பரவலாக காணப்படும் சுண்டு விரல் கொண்டு ஒரு நபரின் குணாதிசயங்கள் மற்றும் ரகசியங்களை கண்டறியும் முறை எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

சுண்டு விரலை வைத்து ரகசியங்களை கண்டுபிடிப்பது எப்படி?

  • சுண்டுவிரலை மோதிர விரலுடன் ஒப்பிடுகையில், அது மிகவும் சிறியதாக இருந்தால், அவர்கள் வெட்கம், கூச்சம் அதிகம் கொள்ளும் நபராக இருப்பார்கள். அதனால் அவர்களின் பெரிய கனவுகளின் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

  • மோதிர விரலின் முதல் கோடுக்கு இணையான அளவு சுண்டு விரல் இருந்தால், அவர்களின் குணாதிசயங்களும் சமநிலையாக இருக்கும். இவர்கள் ஒருவரை பற்றி நன்கு அறிந்த பின்பே நெருங்கி பழகுவார்கள்.

  • மோதிர விரலின் முதல் கோடினை விட சுண்டு விரல் நீளமாக இருந்தால், அவர்கள் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவார்கள். கடினமாக உழைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு லக் என்பது அதிகமாக இருக்காது.

  • ஆள்காட்டி, பெருவிரல், மோதிர விரலுடன் ஒப்பிடுகையில் சுண்டு விரல் மட்டும் கீழ் நிலையில் இருந்தால், அவர்கள் கனவுலகில் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தங்கள் கனவுகளை நிஜமாக்க கஷ்டப்படுவார்கள்.

  • மோதிர விரல், சுண்டு விரல் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் தனித்தன்மை கொண்டிருப்பார்கள். அதிக பலமும், ஆளுமை சக்தியும் கொண்டு திகழ்வார்கள்.

  • சுண்டு விரலின் மேடு சதுரமாக இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு ரோல்மாடலாக திகழ்வார்கள், எதையும் நேரடியாக ஒளிவுமறைவு இல்லாமல் பேசி பழகுவார்கள்.

  • சுண்டு விரலின் மேடு முக்கோணம் போல இருந்தால், அவர்கள் சிறந்த எழுத்தாளராக திகழ்வார்கள். மக்கள் மத்தியில் ஈர்ப்புடன் பேசுவார்கள். ஒரு கூட்டத்தில் தனித்த சிறப்பு குணத்தோடு காணப்படுவார்கள்.

  • சுண்டு விரலின் மேடு வளைந்து இருந்தால், அவர்களுக்கு அச்ச உணர்வு அதிகம் இருக்கும். எதிலும் அமைதியாக இருந்து விட்டு போகலாம் என்று நினைக்கும் குணம் கொண்டவர்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments