தலை முடி அதிமாக வளர வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க

Report Print Santhan in வாழ்க்கை முறை

தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க நாம் பல வழிகளை பின்பற்றுகிறோம். வீட்டிலேயே இந்த மூலிகை எண்ணெய்யை தயார் செய்து தலை முடிக்கு தடவி வந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை நிச்சயம் பெறலாம்.

முடி கொட்டுவது, பொடுகு தொல்லை, அடர்த்தி குறைவது, இள நரை போன்றவை தடுக்க படும்

தேவையான பொருட்கள்

  • சுத்தமான தேங்காய் எண்ணெய் - ஒன்றரை கப்
  • செம்பருத்தி இலை - 12-15
  • செம்பருத்தி பூ - 6
  • கறிவேப்பிலை - 1 கப் க
  • ரிசலாங்கண்ணி/பிரிங்கராஜா - ½ கப்
  • கீழாநெல்லி - ½ கப்

செய்முறை

எண்ணெய்யை தவிர மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கழுவி, வீட்டிற்குள் ஒரு துணியை விரித்து காய வைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பேஸ்ட் போல் ஆகும் வரை அரைக்கவும்.

தேங்காய் எண்ணெயை சூடாக்கவும். இந்த சூடான எண்ணெய்யில் அரைத்த விழுதை போடவும். போட்டவுடன் எண்ணெயில் அந்த விழுது கொதிக்க ஆரம்பிக்கும்.

அடுப்பை மெதுவான தீயில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும். சிறிது நேரத்தில் கொதி அடங்கி விடும். நன்றாக ஆற வைக்கவும். பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்து 5-6 மணிநேரம் அப்படியே விட்டு விடவும்.

6 மணி நேரத்திற்கு பிறகு , இந்த எண்ணெயை ஒரு மஸ்லின் அல்லது காட்டன் துணியை எடுத்து வடிகட்டவும். எண்ணெய்யை முழுவதுமாக பிழிந்து எடுக்கவும்.

இந்த வாசனை மிகுந்த எண்ணெய்யை ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி வைக்கலாம்.

பயன்படுத்தும் முறை

இந்த எண்ணெய்யை தலையில் ஊற்றி, 5 நிமிடங்கள் சூழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும், மசாஜ் செய்தவுடன் 20 நிமிடங்கள் கழித்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஷாம்பூவால் தலையை அலசவும்.

தினசரி பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம், இரவில் தலையில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை ஷாம்பூவால் தலையை அலசலாம்.

வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியலுக்கு இதனை பயன்படுத்தலாம், இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால், பொடுகு ஏற்படுவது குறைகிறது.

வறண்ட தலை முடி வலுப்பெறுகிறது, முடிகள் உடைவது தடுக்கப்படுகிறது, மற்றும் தலை முடி தொடர்பான பல பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்