உங்களுக்கு பிடித்த நிறம் இதில் உள்ளதா..? பாருங்கள்

Report Print Printha in வாழ்க்கை முறை
1772Shares
1772Shares
Promotion

மனிதர்களுக்கு உள்ள குணங்களை போன்று ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது. அதன் அடிப்படையில் எந்த நிறங்களுக்கு எவ்வித தன்மை உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.

நிறம் மற்றும் அதற்கான தன்மைகள் என்ன?
  • பச்சை நிறம் மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது.
  • வெள்ளை ஒரு தூய்மையான நிறம். இந்நிறம் மனதிற்கு அமைதியை கொடுத்து மனதிற்குள் உள்ள தெய்வீக குணங்களை வெளிப்படுத்தும்.
  • மஞ்சள் நிறம் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி கொண்டது. எழுச்சி மற்றும் மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் மஞ்சள் நிறம் அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.
  • நீல நிறம் மகிழ்ச்சியின் தூதனாக கருதப்படுகிறது. எனவே இந்த நீல நிறத்தினை விரும்புவர்கள் எப்போது, மகிழ்ச்சியானவர்கள்.
  • காக்கி நிறம் சேவை உணர்வை தூண்டக் கூடியது. அதனால் தான் பெரும்பாலும் பள்ளி சீருடைகள் காக்கி நிறத்தில் உள்ளது.
  • காவி நிறமானது மனதை ஒருநிலை படுத்துவதற்கு உதவுகிறது.

  • சிவப்பு உக்கிரமான நிறமாகவும், கருப்பு வருத்தம், சோகம், எதிர்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் நிறமாகும்.

  • இளஞ்சிவப்பு, பிங்க் நிறம் மென்மையான உணர்வை தூண்டும். அதாவது காதல், கருணை ஆகியவற்றை குறிக்கிறது.

  • கருஞ்சிவப்பு நிறமானது மனோபலம் மற்றும் தைரியத்தினை குறிக்கிறது.

  • இளம்பச்சை நிறமானது புத்துணர்ச்சிகளை கொடுத்து, புதுமையான எண்ணங்களை மனதில் உண்டாக்க உதவுகிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்