20 ஆண்டுகள் பல்லியை சாப்பிடும் மனிதர்: எப்படி உள்ளார்?

Report Print Printha in வாழ்க்கை முறை

மத்திய பிரதேசத்தில் மேனா எனும் கிராமத்தில் வசித்து வரும் கைலாஷ் எனும் நபர் தனது உணவில் தினமும் பல்லி, பூச்சிகள் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டு உயிருடன் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 20 வருடங்களாக கைலாஷ், தினமும் 3 பல்லிகளை சாப்பிடுவதுடன், இரவு உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் பல்லி சூப்பை குடித்து வருகிறார்.

அதனால் இவரை அந்த கிராமத்து மக்கள் பாய்ஸன் மேன் என்று அழைத்து வருகின்றனர்.

கைலாஷ் இதுவரை ஊர்வன, பூச்சிகள் என 60 வகை விசித்திர உணவுகளை சாப்பிட்டுள்ளாராம். அதுவும் விஷத்தன்மை மிக்க பூச்சிகளை கூட இவர் சாதாரணமாக சாப்பிடுவாராம்.

ஆனால் இவ்வளவு விஷத்தன்மை மிக்க பூச்சிகளை சாப்பிட்டும் இவரது உடலில் எந்த தாக்கமும் இல்லை என்பது அனைவருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.

இந்த காரணத்தால் அவரின் ஊரில் யாரேனும் ஒருவரை பாம்பு, தேள் போன்ற விஷப்பூசிகள் கடித்து விட்டால் கைலாஷ் சென்று தன் வாயால் அந்த விஷத்தை உறிஞ்சி எடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறாராம்.

இது குறித்து அவர், தன்னால் பல்லி போன்ற பூச்சிகளை உணவில் சேர்த்து சாப்பிடாமல் வாழவே முடியாது. என் வாழ்நாளில் பல்லி இல்லாத நாளே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers