ஒற்றை தலைவலியா? அன்னாசி பழம் இருக்கே

Report Print Santhan in வாழ்க்கை முறை

சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாசி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.

இப்படிப்பட்ட அன்னாசிப் பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

இன்றைக்கும் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒற்றை தலைவலிக்கு அன்னாசிப்பழம் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதற்காக 40 நாட்கள் அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

மேலும் மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருப்பவர்கள், ஒரு சங்கு அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.

தொண்டையில் புண், சதை வளர்ச்சி, போன்றவற்றிற்கு அன்னாசிப்பழச் சாறு நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, இதய வலி போன்றவற்றையும் சரிசெய்யும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்