சுண்டு விரலில் வெள்ளி மோதிரம்: இந்த அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமாம்

Report Print Printha in வாழ்க்கை முறை
1338Shares
1338Shares
lankasrimarket.com

வேத ஜோதிடம்படி வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திரன் கோள்களை குறிக்கிறது.

எனவே வெள்ளி உலோகம் அணிந்துக் கொள்பவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், அழகு, செல்வம் மற்றும் மகிழ்ச்சி அனைத்தும் கைகூடி வரும் என்று சொல்கிறது.

வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
  • வெள்ளி மோதிரத்தை நமது உடலில் அணியும் போது, நம் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
  • வீட்டில் வெள்ளி பொருட்களால் அலங்கரிக்கும் போது நமது வீட்டில் மற்றும் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களை அதிகமாக்கும்.
  • வெள்ளி உலோகம் ஒருவித மன அமைதியை கொடுக்கும். இதை அறிந்து கொள்ள சுண்டு விரலில் போட்டுள்ள வெள்ளி மோதிரத்தை ஒரு தண்ணீர் பெளலில் வைத்து பார்த்தால் ஆற்றலை கிரகிக்கும் சக்தியுடன் காணப்படுவது தெரியும்.
  • வியாழன் கிழமை இரவு முழுவதும் தண்ணீரில் வெள்ளி மோதிரத்தை வைத்து, அதன் பின் பூஜை அறையில் வைத்து வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • மோதிரத்தை சந்தன கட்டையில் வைத்து விட்டு சுண்டு விரலில் அணிந்து கொண்டால் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் செயல்களில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.
  • வெள்ளி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலின் அழகை அதிகரித்து நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.
  • வெள்ளி மோதிரம் சந்திரன் பார்வைக்கு வலுக்கொடுத்து, இருமல், சளி, மூட்டு வலிகள் போன்ற மூட்டு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
  • வெள்ளியில் செயினால் கழுத்தில் அணிந்தால், தொண்டையின் வலிமையை அதிகரித்து, தொண்டை மற்றும் குரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
  • வெள்ளியினால் ஆன ஸ்பூன், கரண்டி போன்றவை நல்ல பலனைக் கொடுக்கும். எனவே வெள்ளி பெளலில் தேன் இட்டு அதை வெள்ளி ஸ்பூனால் பருகினால் ஜலதோஷம், சைனஸ் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்