நிலநடுக்கம் ஏற்படும்போது நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Report Print Kabilan in வாழ்க்கை முறை
179Shares
179Shares
ibctamil.com

நிலநடுக்கம் ஏற்பட்டால் பீதியில் நாம் என்ன செய்வதென்றே அறியாமல் இருப்போம், அப்போது நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.

  • நீங்கள் நிலநடுக்கத்தின்போது ஒரு கட்டடத்தில் இருந்தால், உடனடியாக தரையினில் படுத்து, பின் தலையையும், கழுத்தையும் கைகளால் மூடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • நிலநடுக்கம் நிற்கும் வரை உங்களை பாதுகாக்கும் ஏதாவது ஒரு பொருளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • அதுவே நீங்கள் படுக்கையில் இருந்தால், தலை மற்றும் கழுத்தை தலையணையால் மூடிக்கொள்ள வேண்டும்.
  • அதுவே நீங்கள் வெளியில் இருந்தால், கட்டடங்கள், தெரு விளக்குகள், மின் கம்பங்களின் அருகில் இருந்து நகர்ந்து விலகி இருக்க வேண்டும்.
  • ஒருவேளை நீங்கள் காரில் சென்று கொண்டிருந்தால், உடனடியாக காரை நிறுத்திவிட்டு காருக்கு உள்ளேயே இருக்க வேண்டும்.

வீடியோவைப் பார்க்க

- BBC - Tamil

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்