நீங்க இந்த கிழமையில் பிறந்தவரா? இதை படித்து விடுங்கள்

Report Print Printha in வாழ்க்கை முறை

ஜோதிடத்தின் படி, வளிமண்டல கிரகங்கள் தான் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகிறது. அந்த கிரகங்களின் உண்மையான முக்கியத்துவம் தான் ஒருவரது அன்றாட வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது.

அதன்படி, திங்கள் கிழமையில் பிறந்தவர்களது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு காண்போம்.

படைப்பாற்றல்

திங்கள் கிழமையில் பிறந்தவர்களின் படைப்பாற்றல் பெரும்பாலும் உன்னத உச்சத்தில் இருக்கும். ஆனால் அதை மற்றவர்களிடம் எளிதில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் மிகவும் அமைதி, கருணை உள்ளம், அதிகம் பதற்றம் மற்றும் உணர்ச்சி மிக்கவராக இருப்பார்கள்.

நண்பர்கள்

திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் தங்களுக்கான நண்பர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். மேலும் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு என்று அதிக முக்கியதுவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

மனநிலை

திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் நிலையாக இல்லாமல், அடிக்கடி ஏற்ற இறக்க மனநிலையிலேயே இருப்பார்கள். ஆனால் இவர்கள் சற்று பலவீனமானம் மற்றும் பாதுகாப்பின்மையை உணர்வார்கள்.

தொழில்

திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல படைப்புத்திறன், கலைத்திறன், கல்வி மற்றும் திறமை சார்ந்த தொழில்கள் போன்றவை, இவர்களது உண்மையான திறன்களை ஆராய்வதற்கு சிறந்ததாக இருக்கும். மேலும் இவர்களுக்கு நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.

இவர்கள் நல்ல தலைவர்களுக்கான குணத்தைக் கொண்டவர்களாகவும், தொழிலில் நன்கு ஆராய்ந்து தீர்வு காணும் திறன் கொண்டவராகவும் இருப்பார்கள்.

காதல் மற்றும் திருமணம்

திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் சென்சிடிவ் மற்றும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அதனால் இவர்கள் தங்கள் நேரத்தை குடும்பத்தினருடனும், நண்பர்களுடனுமே செலவழிக்க விரும்புவார்கள்.

இவர்கள் அமைதி விரும்பி என்பதால், எந்த ஒரு உறவையும் சண்டை சச்சரவின்றி, அமைதியாக கொண்டு செல்வார்கள்.

பெண்கள்

திங்கள் கிழமையில் பிறந்த பெண்கள் நல்ல தாயாகவும், மனைவியாகவும், குடும்பத்தை நல்லபடியாக நடத்திச் செல்பவராகவும் இருப்பார்கள். இவர்களுக்கு குடும்பத்தை எப்படி ஒன்றாக இணைத்து நடத்துவது என்பது நன்கு தெரியும்.

ஆண்கள்

திங்கள் கிழமையில் பிறந்த ஆண்கள், தங்கள் மனைவியைப் புரிந்து கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

இந்த கிழமையில் பிறந்த ஆண்கள் ஒழுக்கமான வாழ்க்கையை வாழவும், தன் காதல் வாழ்க்கையை சிறப்பாகவும் பராமரிக்கத் தெரிந்தவர்களாகவும் விளங்குவார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்