இந்த மூன்று ராசிக்காரர்களும் அதிர்ஷ்டசாலிகளாம்: உங்க ராசி இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை
1249Shares
1249Shares
ibctamil.com

வரும் காதல் தினத்தை முன்னிட்டு உங்களது ராசிப்படி காதல் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ளுவோம்.

சிம்மம்!

சிம்ம ராசிக்கு காதல் வாழ்க்கை மேலோங்கி இருக்கிறது. இவர்களை சுற்றி இதமான சூழல் அமையவுள்ளது.

காதலர் தினத்தன்று சரியாக என்ன செய்ய வேண்டும் என்ற ஐடியாவுடன் இருப்பார்கள்.

இவர்களிடம் ஒரு மாற்றம் தென்படும் அதிகமான காதல் உணர்வு வெளிப்படும். இவர்களிடம் இருக்கும் ஈகோ குணம் பின்தங்கி செல்லும்.

இவர்களது இதயம் காதலை அள்ளித்தெளித்து பரவ செய்யும். இவர்களை சுற்றி எல்லா நேரமும் இன்பம் பொங்கி வழியும்.

கும்பம்!

இவர்களது காதல் மேம்பட துவங்கும். வரும் காதலர் தினத்தன்று கும்ப ராசிக்காரர்களிடம் இருந்து அவர்களது சிறந்த குணங்கள் வெளிப்படும். இதன் மூலம் அவர்களது நாள் சிறப்பாக அமையும். இதற்கு மீன ராசியின் உதவியும் இருக்கும்.

இந்த காதலர் தினத்தன்று கும்ப ராசிக் காரர்களுக்கு நீண்ட நாள் நீடிக்கும் நிலையான உறவில் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

காந்தத்தை போன்ற ஈர்ப்புக் கொள்ளும் உண்மையான காதலை இந்த காதலர் தினத்தன்று அவர்கள் தேரடிப் பிடிப்பார்கள்.

மீனம்!

காதலை முடிவிலியாய் பின்தொடரும் இந்த மீனராசிக் காரர்கள் செவ்வாயின் தாக்கத்தால் தனி சிறப்பு பெற்று திகழ்வார்கள்.

இவர்களது எல்லையற்ற காதல், தங்களை சுற்றி இருக்கும் அனைவரையும் நேசிக்க செய்யும்.

காதல் மட்டுமின்றி, எல்லா உறவுகள் மீதும் அதிக நேசம் செலுத்துவார்கள் மீனராசிக் காரர்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்