இந்த 6ல் உங்களுக்கு பிடிச்சது எது? சீக்கிரமா சொல்லிட்டு இதை படியுங்கள்

Report Print Printha in வாழ்க்கை முறை
524Shares
524Shares
lankasrimarket.com

ஒருவரின் எண்ணங்கள் மற்றும் விருப்பம் என்பது அவர்களின் குணாதிசயங்களை பொருத்து அமையும்.

உளவியல் ரீதியான ஆய்வுப்படி, ஒருவர் தேர்வு செய்யும் சில வர்ணங்கள் கலந்த டிசைன் மூலமாக ஒருவரை குறித்த சில விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் அது அனைவருக்கும் நூறு சதவிதம் பொருந்தும் என்று கூற முடியாது. ஏறத்தாழ பொருந்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.

முதல் படம்

முதல் படத்தை தேர்வு செய்தவர்கள் இதமான தட்பவெப்பம் விரும்பும் நபராக நீங்கள் இருப்பார்கள். இவர்களுக்கு கடற்கரை காற்றில் நடப்பது பிடித்தமான செயலாக இருக்கலாம்.

இத்தகையவர்கள் அமைதியான சூழல் அமைத்து மன அழுத்தம் குறைத்து கொண்டு நிம்மதியாக வாழ மற்றவர்களுக்கு உதாரணமாக விளாங்குவார்கள்.

அதனால் இவர்களிடம் அதிக நேரம் செலவழிக்க நண்பர்கள் விரும்புவார்கள். இவர்களின் இதமான குணம், பேச்சு அனைவரையும் ஈர்க்கும்.

இரண்டாவது படம்

இரண்டாவது படத்தை தேர்வு செய்தவர்கள், மனிதர்களின் உணர்வுகளோடு ஒன்றிப் போகும் தன்மை கொண்டிருப்பார்கள்.

இவர்களிடம் இரக்க குணம், ஆன்மீக எண்ணம் அதிகம் இருக்கும். இறைச்சி உணவுகளை காட்டிலும், சைவ உணவுகளை அதிகம் விரும்புவார்கள்.

மூன்றாவது படம்

மூன்றாவது படத்தை தேர்வு செய்தவர்கள், அமைதியாக, அனைத்து விதமான கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளும் நபராக இருப்பார்கள்.

ஆனால் இவர்களை சுற்றி இருக்கும் நபர்களில் இவர்கள் மட்டும் கொஞ்சம் கடுமையான நபராக இருப்பார்கள்.

இத்தகையவர்கள் ஏதேனும் செல்ல பிராணி வளர்த்து வருவார்கள் அல்லது வளர்க்க வேண்டும் என்ற பெரிய ஆவலை கொண்டிருப்பார்கள்.

நான்காவது படம்

நான்காவது படத்தை தேர்வு செய்தவர்கள் தங்களின் வாழ்க்கையை ரசித்து வாழ விரும்புவார்கள். கோடு போட்டு வாழும் வாழ்க்கை பிடிக்காது.

இவர்களிடம் இருந்து அந்தந்த நொடி, தருணத்திற்கு ஏற்ப ஸ்பாட்டில் அட்டகாசமாக பேசும் தன்மை, கவுண்டர் கொடுப்பது போன்றவற்றை இவர்களை சுற்றி இருக்கும் நபர்கள் விரும்புவார்கள்.

இவர்களுக்கு இரவு நேரங்களில் வெளியே உலாவ பிடிக்கும். ஆனால் புதிய மக்களுடன் பழகுவதில் சில சமயம் தயக்கம் உண்டாகலாம்.

ஐந்தாவது படம்

ஐந்தாவது படத்தை தேர்வு செய்தவர்கள், பகுத்தறிவு நிறைந்த நபராக இருக்கலாம். அனைவருக்கும் மரியாதை அளித்து பழகுவார்கள். மற்றவருடைய கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பார்கள்.

ஏதேனும் பிரச்சனை என்றால் இவர்களிடம் தீர்வு கேட்டு சிலர் வருவார்கள். ஏனெனில் இவர்களின் வார்த்தை, போதனை, சிந்தனை மற்றவரை ஈர்க்கும்.

ஆறாவது படம்

ஆறாவது படத்தை தேர்வு செய்தவர்கள், ஆற்றை போல வேகமாக ஓடும் குணம் கொண்டிருப்பார்கள். அரசியல் மற்றும் சமூகத்தின் மீது வலிமையான உணர்வுகள் கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

இவர்களுக்கு சப்தமான இசை மீது ஆர்வம், ஈர்ப்பு அதிகம் இருக்கும். நண்பர்களை தங்களின் உறவினர் போல கருதுவார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்