இந்த இடங்களில் துடிக்கிறதா? என்ன அர்த்தம்-ன்னு தெரிஞ்சிகோங்க

Report Print Printha in வாழ்க்கை முறை

கண்கள் துடிக்கும் போது, அது நல்லது கெட்டது என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.

சமுத்ர சாஸ்திரத்தின் படி, இது வெறும் கண்களுக்கு மட்டுமின்றி, உடலின் சில பகுதிகளில் துடிப்பு அல்லது அரிப்பு ஏற்படுவதற்கும் என்ன அர்த்தம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

உடலின் இடது பக்கம்

ஒருவரது உடலின் இடது பக்கத்தில் தொடர்ச்சியாக அரித்தால், அது ஏதோ ஒரு கெட்ட செய்தி வரப் போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

இடது பக்கத்தில் அரிப்பு ஏற்பட்டால், அது குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவருடைய மரணச் செய்தியைக் கேட்கக்கூடும் அல்லது யாரேனும் வேலையை இழந்த செய்தியைக் கேட்கக்கூடும் என்று அர்த்தமாகும்.

உடலின் வலது பக்கம்

ஒருவரது உடலின் வலது பக்கத்தில் துடிப்பை உணர்ந்தால், அதுவும் ஆணாக இருந்தால், அவரை நோக்கி ஒரு நல்ல செய்தி வரப் போகிறது என்று அர்த்தம்.

அதுவே பெண்ணாக இருந்தால், அப்படியே எதிராக கெட்ட செய்தி வரும். அதுவே வலது பக்கம் அரித்தால் நல்ல செய்தியைக் கேட்கக் கூடும்.

நெற்றியில் அரிப்பு

நெற்றியில் அரிப்பு ஏற்பட்டால், அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு சந்தோஷமான விடயம் ஒன்று நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

அதிலும் நெற்றியின் மையப் பகுதியில் அரிப்பு ஏற்பட்டால், அவர்கள் விரைவில் வாழ்வில் பணம் நன்மைகளை அடைவார்கள் என்று அர்த்தம்.

கண்கள் துடிப்பது

இடது கண் துடித்தால், அவர்களை நோக்கி ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்றும், வலது கண் துடித்தால், இனிமேல் அவர்களது கனவு நனவாகப் போகிறது என்று அர்த்தம்.

அதிலும் பெண்களுக்கு என்றால் இடது கண் துடித்தால் நற்செய்தியும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நற்செய்தியும் தேடி வரும்.

அதுவே ஒருவரது கண்கள் நீண்ட நாட்களாக துடித்தால், அவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு நாள்பட்ட நோய் உள்ளது என்று அர்த்தம்.

கன்னங்கள் துடிப்பது

ஒருவரது இரண்டு கன்னங்களும் ஒரே நேரத்தில் துடித்தால், அவர்களின் கையில் அதிக பணம் விரைவில் சேரப் போகிறது என்று அர்த்தம்.

உதடு துடிப்பது

உதடுகள் துடித்தால் அது உங்கள் வாழ்க்கையில் விரைவில் புதிய நண்பர்களின் வருகை கிடைக்கும் என்று அர்த்தம். இல்லாவிட்டால், நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பருடன் மீண்டும் இணைவார்கள் என்று அர்த்தம்.

தோள்பட்டை துடிப்பது

தோள்பட்டையில் துடிப்பை உணர்ந்தால், அவர்கள் விரைவில் நிதி சுதந்திரத்தைப் பெறுவார்கள் என்று அர்த்தம். அல்லது அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

உள்ளங்கை துடிப்பது

ஒருவரது உள்ளங்கை அதிகமாக துடித்தால், அவர்களைச் சுற்றி ஒரு பெரிய பிரச்சனை வரப் போகிறது என்று அர்த்தம்.

விரல்கள் துடிப்பது

ஒருவரது விரல்கள் துடித்தால், அவர்கள் விரைவில் பழைய நண்பர்கள் அல்லது முன்னாள் காதலனை காணும் வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்