அசரவைக்கும் துபாய் இளவரசரின் சொகுசு வாழ்க்கை

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

துபாயின் பரம்பரை இளவரசர் Hamdan bin Mohammed Al Maktoum - க்கு 35 வயதாகிவிட்டதால் உலக அரச குடும்ப வாரிசுகளின் பட்டியலில் திருமணம் செய்துகொள்ள தகுதியானவராக இருக்கிறார்.

Hamdan bin Mohammed Al Maktoum என்ற பெயரை விட Fazza என்ற பெயராலேயே மக்களால் அதிகம் அறியப்படுகிறார். கவிதை எழுதும் பழக்கம் கொண்ட இவர், Fazza என்ற புனைப்பெயரில் தான் கவிதைகளை வெளியிடுகிறார்.

இவரது சொகுசான வாழ்க்கை முறையை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் அப்டேட் செய்து வருவதன் மூலம், 5.1 million பேர் இன்ஸ்டாகிராமை பின்தொடர்கிறார்கள்.

ஸ்கைடைவிங், குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பயணம் செய்வது ஆகியவை தான் இவரது பொழுதுபோக்கு. அதுமட்டுமின்றி புகைப்படம் எடுப்பது இவருக்கு அதிக ஆசை என்பதால், தான் பயணம் செய்யும்போது கண்ணில் தென்படும் அழகிய இடங்களை தனது கமெராவில் படம்பிடித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்துவிடுவார்.

இவரது சொத்து மதிப்பு $4.5 பில்லியன் ஆகும். உலகிலேயே அதிகமான கார் கலெக்ஷன்களை வைத்துள்ள நபர் ஆவார். Gold Platted Nissan GTR காரின் மதிப்பு $ 1 மில்லியன்.

gold coated மற்றும் வைரத்தால் பூசப்பட்ட காரின் மதிப்பு $ 4.5 மில்லியன் மற்றும் இதர கார்களையும் வைத்துள்ளார்.

இவர் வழக்கமாக ஆடம்பர வாகனம் மற்றும் விமானத்திலேயே பயணம் செய்வார். இவருக்கு 22 உடன்பிறப்புகள் உள்ளனர்

Dubai Executive Council- யின் தலைவராக இருக்கும் இவர், தொழிலதிபரும் ஆவார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்