எட்டு மாதங்களில் 36 கிலோ: எடையை குறைத்த பிரபல இயக்குனரின் சீக்ரெட்

Report Print Trinity in வாழ்க்கை முறை

துரித உணவுகள், ஒரே இடத்தில் வேலை என கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டு உடல் எடை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

எடையை குறைக்க பலரும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர், அனைத்தும் வெற்றியில் முடிந்ததா என்றால் கேள்விக்குறி தான்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான Milap Zaveri எட்டே மாதத்தில் 36 கிலோ வரை எடை குறைத்து அழகாக மாறியுள்ளார்.

இதற்கு மிக முக்கியமான காரணம் கடந்த ஆகஸ்ட் மாதம், 130 கிலோ உடல் எடை என்பதால் உடல்நலக் காப்பீட்டுக்கான இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதே.

அன்றைய தினமே தனது மனைவிக்கும், மகனுக்கும் சிறந்த குடும்ப தலைவனாக இருக்க வேண்டும் என முடிவெடுத்த Milap Zaveri, உணவு பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்த Veg Manchurian மற்றும் Sizzlers அறவே தவிர்த்ததுடன், எந்தவொரு மருத்துவர், டயட்டீசியனிடம் ஆலோசனை கேட்காமல் சுய முயற்சியில் எடை குறைத்தாக கூறுகிறார்.

அடுத்து, முக்கியமாக கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்துள்ளார்.

காலை உணவாக வேகவைத்த முட்டை, சாண்ட்விச், சர்க்கரை கலந்த டீ, மதிய உணவாக நட்ஸ் மற்றும் பழங்கள், இரவில் பருப்பு, முட்டை அல்லது காய்கறிகள், பன்னீரை எடுத்துக் கொள்வாராம்.

அத்துடன் வாரத்திற்கு ஆறு நாட்கள் 90 நிமிட கார்டியோ பயிற்சிகளையும் செய்து வந்துள்ளார், இதன் விளைவு எட்டே மாதத்தில் 36 கிலோ குறைந்து தற்போது 94 கிலோ எடையுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்