நீங்கள் இரவில் தூங்காமல் பகலில் தூங்குபவரா? இதோ அதற்கான ஜோதிட காரணங்கள்

Report Print Kavitha in வாழ்க்கை முறை

மனிதனுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும்.

நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான்.

மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது.

இந்த மூளைக்கும் நரம்பிற்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாகும்.

ஒருவருக்கு மூளை கோளாறுகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது.

ஜாதகப்படி பகலில் தூங்குவதற்கான முக்கியமான காரணங்களை நாமும் தெரிந்து கொள்ளுவோம்.

  1. ஒருவருக்கு இரவில் நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும். அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமையச் சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.
  2. இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மானிக்கமுடியும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.
  3. அடுத்ததாகத் தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு , குளுமையான சூழ்நிலை , இனிமையான இசை , வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் ,கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி ,இவையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.
  4. ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.
  5. கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையைத் தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையைத் தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாகக் கர்ம வினையைத் தெரிவிப்பவர் ஆவார்.
  6. பாவக ரீதியாக ஒருவர் தூக்க சுகத்தை அனுபவிக்க லக்ன பாவம் பலமாகவும் அசுப கிரகங்கள் தொடர்பில்லாமலும் சுப கிரக சேர்க்கையும் பெற்று இருக்க வேணெடும். ஒருவர் ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தக்கிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டைப் பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும். சூரியன் முதல் பாவத்துக்கு அதிபதி மற்றும் ஆத்ம காரகன் ஆகின்றார். மற்றும் செவ்வாய் காலபுருஷ ராசிக்கு லக்னாதிபதி ஆகின்றார். இவர்களின் நிலையும் நிம்மதியான தூக்கத்திற்கு முக்கியமானதாகும்.
  7. அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தைப் பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையைக் கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூடக் கிடைக்காது. பன்னிரெண்டாம் பாவத்தை அசுப கிரஹங்கள் தசா புத்தி மற்றும் கோசார நிலையில் தொடர்பு கொள்ளும் நிலையில் இதுபோன்ற தூக்க கோளாறுகள் ஏற்படும்.
  8. லக்னத்தில் மாந்தி நின்றால் அவர்களுக்கு மாந்தியை ஒவ்வொரு மாதமும் சந்திரன் கடக்கும்பொழுதெல்லாம் தூக்கம் தடைப்படும். மேலும் மாந்தியோடு சந்திரன் சேர்க்கையும் பெற்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் தூக்கம் ஒரு பகல் கனவு தான். லக்னத்தில் நிற்கும் மாந்தி தனது 2-7-12 பார்வையால் இரண்டு ஏழு பன்னிரெண்டு வீடுகளை பார்ப்பதால் தூக்கமின்மை ஒரு வியாதியாகவே அமையும்.
  9. அடுத்தது தூக்கத்தினை தீர்மானிக்கும் பாவங்கள் சுகஸ்தானம் எனப்படும் 4ம் பாவம், பாவாத்பாவத்தில் 4-க்கு 4-ஆன. ஏழாம் பாவம் எனப்படும் களத்திர ஸ்தானமும் 7க்கு 4-ஆன பத்தாம் பாவம் எனப்படும் கர்ம ஸ்தானமும் ஆகும். காலபுருஷனுக்கு கேந்திரவஸ்தானங்களிலோ அல்லது ஜெனன ஜாதக கேந்திர ஸ்தானங்களிலோ சனி அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் கோழி தூக்கம்தான்.
  10. ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும்.
  11. கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு நல்ல கணவனும் அமைவது இறைவன் கொடுத்த வரமாகும். ஒருவர் ஜாதகத்தில் கணவன் மனைவியைப் பற்றி குறிப்பிடுவது ஏழாம் பாவமாகும். ஏழாம் பாவத்தில் அசுப கிரஹங்கள் நின்றுவிட்டால் கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் தூக்கத்தை கெடுத்துக்கொள்ளக் காரணமாவார்கள்.
  12. சுகஸ்தானமான 4ம் பாவத்திற்கு 7ம் பாவம் பத்தாம் பாவமாகும். எனவே ஒருவருடைய சுகமும் வேலையின் தன்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். ஒன்று வலுக்கும்போது மற்றொன்று செயலிழந்துவிடும். ஒருவர் தூக்கமே கதி என்று இருப்பதும் வேலையே கதி என்று இருப்பதும் தீர்மானிப்பது இந்த இருபாவ தொடர்புகளாகும். அமைதியான தூக்கத்திற்கான பரிகார ஸ்தலங்கள்:
  13. லக்னத்தில் ராகு கேது அமையப்பெற்றவர்கள், லக்னம், லக்னாதிபதி, சந்திரன் ராகுவின் சாரத்தில் அதாவது திருவாதிரை, சுவாதி, சதயம் நக்ஷத்திர சாரங்களில் நின்றுவிட்டால் அவர்களின் தசா புத்தி காலங்களில் அந்நிய நாட்டு கலாச்சாரத்திற்கு உட்பட்டு தூக்கத்தை தொலைப்பர்.
  14. கோசாரக சனி சந்திரனை தொடர்பு கொள்ளும் காலங்களில் முக்கியமாக ஏழரை சனி காலங்களில் மற்றும் சனி தசை சந்திர புத்தி மற்றும் சந்திர தசை சனி புத்தி காலங்களில் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் விதமாக இரவு நேர வேலைக்குச் சென்று தூக்கத்தை தொலைக்க நேரிடும். அந்த தசா புத்தி காலங்கள் முடிந்தவுடன் இரவு தூங்கும் நிலை ஏற்படும்.
  15. கோசாரக சனி ராகு மற்றும் கேதுவை தொடர்பு கொள்ளும் காலங்களிலும், கோசராக ராகு, கேது ஜெனன சனியை தொடர்பு கொள்ளும்போதும் வேலையிழப்பின் காரணமாகக் கவலை மற்றும் விரக்தி நிலையில் இரவில் தூங்காத நிலை ஏற்படும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers