இந்த ஆறு ராசிக்குள் உங்க ராசி இருக்கா? அப்படியென்றால் இவர்களுடன் ஒத்துப்போகும்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

12 ராசிகளில், இந்த ஆறு ராசிகளின் ஜோடியனது இல்லறத்தில் நல்ல பந்தம் மற்றும் ஆரோக்கியம், வெற்றி, லாபத்தை என அனைத்தையும் அள்ளித்தரும் ராசிகளாக அமைகின்றது.

அது எந்த எந்த ஜோடி ராசிகள் என்று பார்பபோம்.

துலாம் - விருச்சிகம்!

துலாம் மற்றும் விருச்சிகம் ஒன்றிணையும் போது, அவர்களுக்கு இடையே உருவாகும் ரொமான்ஸ் ஆனது இருவருக்கு இடையே இரகசியமாக காக்கப்படும்.

துலாம் காதல் மற்றும் ஆசைகளில் பேரார்வம் கொண்டவர்.

மறுபக்கம் விருச்சிகம் தங்கள் துணை மீது ஈடில்லா பாசம் பொழியும் நபர்கள்.

ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்கள் இருவரின் உறவானது கடைசியில் சிறந்த ஜோடியாக திகழவார்கள்.

மீனம் - கடகம்!

உணர்வு ரீதியாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் இவர்கள் ஒரு சிறந்த ஜோடி.

இவர்கள் இருவரும் உணர்ச்சியின் வலையில் பின்னிப்பிணைந்து இருப்பார்கள்.

ஒரு கட்டதில் வெளியுலகை மறந்து ஒருவர் மீதான ஒருவர் காதலில் மூழ்கி திளைப்பார்கள்.

இருவரும் ஒன்றாக இருக்கும் போது உணர்வு ரீதியாகவும், உறவு ரீதியாகவும் சமநிலையில் இருப்பார்கள். இவர்கள் சிறந்த ஒரு ஜோடியாக திகழ்வார்கள்.

தனுசு - மேஷம்!

இந்த இரு ராசியும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள்.

இவர்கள் காதலை உலகறிய செய்ய கருதுபவர்கள்.

இவர்கள் அறிவு சார்ந்து மிகவும் கூர்மையாக செயற்பட கூடியவர்கள் .

இவர்கள் இருவரும் ஒன்றிணையும் போது அவர்கள் முதலில் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள், பிறகு மெல்ல, மெல்ல காதலில் திளைத்து சிறந்த ஜோடியாக மாறுவார்கள்.

மிதுனம் - கும்பம்

ஒருவருடன் ஒருவர் சமநிலையில் பழக கூடியவர்கள்.

மிதுனம் எதிலும் நிச்சயமற்று இருப்பவர்கள், மறுபுறம் கும்பம் எதையும் யோசித்து கவனமாக செய்யக் கூடியவர்கள்.

ஆனால், இவர்கள் இருவரும் சேரும் போது புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்து போவது உருவாகும்.

இதனால், உறவை சமநிலையில் வழிநடத்தி சென்று வெற்றி பாதையை எட்டுவார்கள்.

கன்னி - ரிஷபம்

கன்னி மற்றும் ரிஷபம் ஒன்றிணையும் போது அவர்களுக்கு வெறும் உறவு மட்டுமின்றி, இவர்கள் ஒரு சிறந்த தொழில் சார்ந்த துணையாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு.

இவர்களது கூட்டு .ஷலாபகரமான தொழிலை அமைத்துக் கொடுக்கும்.

இல்லறம், வேலை, தொழில், வெற்றி என்று அனைத்திலும் தங்கள் சமப்பங்கினை அளிக்க இவர்கள் மறுக்க மாட்டார்கள்.

மகரம் - சிம்மம்

மகரம் எந்த ராசிக்கும் வளைந்துக் கொடுத்து போகக் கூடிய ராசி ஆகும். முக்கியமாக சிம்மம் என்றால் நூறு சதவிதம் பொருந்தும்.

மகரம் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமான ராசி.

ஆனால், சிம்மம் எதையும் சம அளவில் பார்த்து, ஆராயும் ராசி.

இவர்கள் இருவர் மத்தியில் உணர்ச்சி ரீதியான உறவும், உண்மையான உறவும் சமநிலையில் அமையும்.

இவர்கள் தங்கள் இல்லறத்தில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக திகழ்வார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers