கருணாநிதியை இப்படி பார்த்திருக்கிறீர்களா? காலம்தோறும் மாறிய ஆடை

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

கருணாநிதியை இதுவரை வெள்ளை நிற வேஷ்டி சட்டை மற்றும் மஞ்சள் துண்டு ஆகியவற்றில் தான் அதிகமாக பார்த்திருப்போம்.

நாத்திகவாதியான கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்திருப்பதற்கு அவர் ராசிப்படி அணிந்திருப்பதாக விமர்சனம் எழுந்தது.

கலைஞரின் புகைப்படங்களைப் பார்த்தால் நீண்ட காலமாக அவருடைய உடை அமைப்பு மற்றும் அவரது ஆடைகளிலும் மாற்றம் இருப்பதை பார்க்கலாம்.

மந்திரிகுமாரி படம் வெளிவந்த காலத்தில் வேட்டியும் அரைக்கை வைத்த புஷ் கோட் என்ற சட்டை அணிந்திருந்தார். பின்னர் கைத்தறிப் பட்டில் பல வண்ணங்களில் கழுத்தில்லாத ஜிப்பா அதற்கேற்ற வண்ண மேல் துண்டு.

பருத்தித் துணியில் வெள்ளை ஜிப்பா, கறுப்பு, சிவப்புக் கரையுடன் நீண்ட மேல் துண்டு. அமைச்சரான பின் காலர் வைத்த முழுக்கை சட்டை, வெள்ளைத் துண்டு என மீண்டும் ஒரு மாற்றம்.

வெள்ளைச் சட்டையுடன் பல்வேறு வண்ணங்களில் சால்வைகள் - துண்டுக்குப் பதிலாக. இப்போது மஞ்சள் சால்வை.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்