எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்? எப்போது கூடாது?

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

இன்றைய தலைமுறையினரை பொறுத்தவரை எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது தீபாவளிக்கு மட்டுமே.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை மட்டும் தராமல் உள்ளத்துக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்
 • வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
 • உடலில் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்ப்பதன் மூலம் தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
 • தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. குறிப்பாக உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.
 • எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம்.
 • எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. உடலில் சூடு குறைவதால் மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
எந்தெந்த தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது
 • ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குளிப்பது நல்லது. ஏனென்றால் சனி பகவான் அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. எனவே சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
 • பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல் நலம்.
 • ஆனால் ஐப்பசி மாதம் வரும் தீபாவளியன்று அனைவரும் அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அது கங்கையில் குளிப்பதற்குச் சமம்.
எந்தெந்த தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது
 • அமாவாசை, பௌர்ணமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • உறவினர்கள் ஊருக்குச் செல்லும் பொழுதும், பிறந்த நாள், திருமண நாள், விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் தவிர்ப்பது நல்லது.
 • காலை 8 மணிக்கு முன் மற்றும் மாலை 5 மணிக்கு பின் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers