சொர்க்கத்தில் மிக ஆடம்பரமாக நடந்து முடிந்த அம்பானி மகளின் நிச்சயதார்த்தம்: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிராமலுக்கும் மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சொர்க்கம் என அழைக்கப்படும் லேக்கோமோ என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில், இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நதிகளுக்கு அருகில் அழகிய வில்லாக்கள் அமைக்கப்பட்டிருப்பதால் லேக்கோமோ என்ற இந்த சொர்க்கம் சுற்றுலாபயணிகள் மத்தியில் மிக பிரபலம். திருமணங்கள், நிச்சயதார்த்தங்கள் இங்கு நடைபெறும்.

இஷா அம்பானியின் நிச்சயார்தத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் விருந்தினர்களுக்குப் பிரம்மாண்டமான விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு விருந்தில் நடன நிகழ்ச்சிகள், மேற்கத்திய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆனந்த் கறுப்பு நிறத்தில் குர்தாவும், இஷா பிங்க் நிறத்தில் கவுனும் அணிந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்