நீங்க எப்பவும் அதிர்ஷ்டசாலியா இருக்க வேண்டுமா? அப்போ இனி இதையெல்லாம் செய்யதீங்க!

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

எல்லோருக்கும் அதிர்ஷ்டசாலியாக வேண்டுமென்ற எண்ணம் மனதில் இருக்கும்.

ஆனால் நாம் செய்யும் சில தவறுகளை தவிர்ப்பதின் மூலமாகவே அவற்றை உண்மையில் நடக்க வைக்க முடியும்.

அதிர்ஷ்டசாலியாக இருக்க மாலையில் செய்யக்கூடாதவை

  • மாலையில் ஒருவருக்கு பசி ஏற்பட்டாலும் உணவு உண்டால் வீட்டில் செலவுகளை அதிகரிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே மாலை நேரங்களில் உணவு உண்பதற்கு பதிலாக பழச்சாறினை அருந்தலாம்.

  • சூரிய மறைவின் போது வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் தான் லட்சுமி தேவி வீட்டில் இருக்க வேண்டும் என பூஜை செய்வோம்.

  • மாலை வேளையில் வீட்டில் சுத்தமற்ற வேலைகளை செய்தால் வீட்டிற்கு லட்சுமி தேவி வரமாட்டாள் மேலும் இதனால் அதிக பணபிரச்சனை வரும்.

  • மாலை நேரத்தில் தூங்கினால் அது மனநிலையை மந்தபடுத்தி, நினைவு திறன் குறைய வாய்ப்பு உண்டு. மேலும் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • மாலை நேரத்தில் செடி, கொடி, மரங்களில் உள்ள இலைகளை பறிக்க கூடாது அப்படி செய்தால் வறுமை அதிகரிக்கும். முக்கியமாக துளசி செடியில் இலையை பறிக்க கூடாது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers