வருங்கால மனைவி பிரியங்கா சோப்ராவுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்த நிக் ஜோன்ஸ்! எத்தனை கோடி தெரியுமா?

Report Print Kabilan in வாழ்க்கை முறை

நடிகை பிரியங்கா சோப்ராவின் காதலரும், வருங்கால கணவருமான நிக் ஜோனஸ் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட பத்து வயது சிறியவரான நிக் ஜோனஸை காதலித்து வந்த நிலையில், இருவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு, இருவரும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேற உள்ளனர். ஹாலிவுட்டில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள, பிரியங்கா சோப்ரா அமெரிக்காவிலேயே இருக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தார்.

ஆனால், அங்கு அவருக்கு தனிப்பட்ட பங்களா இல்லை. இந்நிலையில், நிக் ஜோனஸ் 6.5 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்களா ஒன்றினை வாங்கியுள்ளார். இதனை பிரியங்கா சோப்ராவுக்கு சிறப்பு பரிசாக நிக் அளித்துள்ளார்.

இந்த பங்களா பள்ளத்தாக்கின் சரிவில் கட்டப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் தற்போதைய மார்க்கெட்டில், முதல் தரத்தில் உள்ளவை என்று கூறப்படுகிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்