வைரலாகும் அம்பானி குடும்பத்தினரின் வீடியோ

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் டிசம்பர் 12 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்கு முன்னதா, திருமண சடங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று தொடங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் கலந்துகொண்டார்.

மேலும், உலக பிரபலங்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவரும் கலந்துகொண்டு, அம்பானி வீட்டின் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது.

மேலும், அம்பானி மகள் இஷா பிங்க் நிற ஆடையில் ஜொலித்த புகைப்படம் மற்றும் தனது மகளின் சங்கீத் நிகழ்ச்சியில் நீதா அம்பானி மகன்களுடன் நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்