4 மாதத்தில் 100 கிலோ எடை குறைத்து சாதனை செய்த சிறுவன்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள உத்தர்நகரில் வசிக்கும் மிகிர் ஜெயின் எனும் சிறுவன் 4 மாதத்தில் 100 கிலோ எடை குறைத்துள்ளான்.

மிகிர் சிறுவயதாக இருக்கும்போதே, அவன் விரும்பிக் கேட்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா மற்றும் எண்ணெயில் பொறித்த நொறுக்குத் தீனிகள் என அனைத்தையும் அவரது பெற்றோர் வாங்கித் கொடுத்துள்ளனர்.

உடல் எடை அதிகரித்ததால் பள்ளிக்கு செல்லமுடியாமல் 7 வயதிலேயே படிப்பைக் கைவிட நேர்ந்தது.

சர்க்கரை நோய் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனையும் ஏற்பட்டது. 7 வயதில் 237 கிலோ எடையால் எழுந்திருக்கக்கூட முடியாமல் படுத்த படுக்கையாய் கிடந்த சிறுவன், அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையால் தற்போது 100 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார்.

தற்போது தாமாக எழுந்து நடப்பது மட்டுமின்றி ஓடி ஆடி விளையாட முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு 50 கிலோ வரை எடையைக் குறைக்க வேண்டியுள்ளதால் தற்போது முளைகட்டிய பயிர்கள், தானியங்கள் போன்ற ஆரோக்கிய உணவு வகைகளை மட்டுமே உண்பதாக சிறுவன் கூறியுள்ளான்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்