அந்த விடயத்திற்காக இன்னும் வருத்தப்படுகிறேன்: மனம் திறந்த பிரபல நடிகை கரீனா கபூர்

Report Print Kabilan in வாழ்க்கை முறை

பிரபல ஹிந்தி நடிகை கரீனா கபூர், நடிக்க வந்து விட்டதால் தன்னால் படிப்பை தொடர முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, நடிகர் சயீப் அலிகானை 10 வயது குறைவான நடிகை கரீனா கபூர் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தைமூர் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ரேடியோ ஒன்றில் பேசிய கரீனா தனது படிப்பு குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘என் நடிப்பு வாழ்க்கையை சற்று பொறுமையாக தொடங்கியிருக்கலாம் என பலமுறை யோசித்திருக்கிறேன்.

17 வயதிலேயே நான் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டேன். இன்னும் படித்திருக்கலாமோ என இப்போது வேதனைப்படுகிறேன். அதற்காக நான் இன்றளவும் வருத்தப்படுகிறேன்.

ஆனால், இப்போது உள்ள காலகட்டத்தில் படிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. நான் பட்டப்படிப்பு கூட முடிக்கவில்லை. ஆனால், என் மகன் தைமூரை அப்படி இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

அவனை நிறைய படிக்க வைப்பேன். அதன்பின் அவனுக்கு என்ன தேவையோ அதை அவனே தேர்ந்தெடுக்கட்டும். தைமூரை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதே என் ஒரே ஆசை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers