55,000 ஆடைகள் வாங்கி குவித்த காதல் கணவர்– இன்றும் ஜொலிக்கிறது 83வயதானவரின் காதல்

Report Print Abisha in வாழ்க்கை முறை

ஜேர்மனியில் ஒருமுறை அணிந்த ஆடையை மனைவி திரும்ப அணிய கூடாதென்று 55,000 ஆடைகள் வாங்கி குவித்துள்ளார் காதல் கணவன்.

ஜேர்மனியை சேர்ந்த தம்பதியினர் பால்பிராக்மேன், மார்கிரேட். பால்பிராக்மேனுக்கு தற்போது 83 வயது ஆகின்றது.

இந்த தம்பதியினர் ஒரு நடன மையத்தில் சந்தித்து இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணமாகி 56 ஆண்டுகள் ஆன நிலையில், பால் மனைவிக்காக வாக்கி குவித்தஆடைகள் மட்டும் 55,000

இதுகுறித்து பால், என்மனைவி ஒரு முறை அணிந்த ஆடை திரும்ப அணிய கூடாதென்பது என்னுடைய விரும்பம். அதற்காக ஆடைகள் வாங்கி குவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆடைகள் ஒவ்வொன்றையும் அதிக விலை கொடுத்து பார்த்து பார்த்து வாங்கி உள்ளார் பால்.

இதற்காக அவரது வீட்டில் பெரிய பீரோக்கள், அலமாரிகள் என்று ஒரு ஜவுளிக்கடை அளவிற்கு அமைத்துள்ளார்.

இந்த தம்பதியினர் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆடைகள் வாங்குவதை நிறுத்தி உள்ளனர். ஏனெனில் அவர்கள்வீட்டில் ஆடைகள் வைக்க இனி இடம் இல்லை என்பதே காரணம்.

மேலும் தற்போது வரை 7000 ஆடைகளை ஒரு துணிகடைக்கு விற்றுள்ளதாக அந்த தம்பத்தியினர் தெரிவித்துள்ளனர்.

அதில் 200 கவுன்கள் மட்டும் எப்போதும் விற்கமாட்டேன் என்று கூறுகிறார் பால்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers