எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கண்டதும் காதல் கைகூடும் தெரியுமா?

Report Print Kabilan in வாழ்க்கை முறை
616Shares

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கண்டதும் காதல் என்பது கை கூடும் என்பது குறித்து காண்போம்.

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் கை கூடுமா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றன.

  • பொதுவாக எந்த ராசிகளுக்கும் 5 மற்றும் 9ஆம் ராசியாகி அமைபவருடன் காதல் ஏற்படும். ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு. இந்த காதல் ஐந்தாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது அல்லது அதிபதி 5ஆம் அதிபதி இடத்தில் இருப்பது திருமணத்தில் முடியும்.
  • அல்லது 7ஆம் அதிபதிக்கும் 5ஆம் அதிபதி பார்வை பெறுவது அல்லது 7ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் 5ஆம் அதிபதி இருப்பது போன்றவையும் காதல் திருமணத்தில் அமையும்.
  • ஒன்பதாம் அதிபதிக்கும், வீட்டிற்கும் 5ஆம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் கை கூடும். களத்திரக்காரனாகிய சுக்கிரன், 7ஆம் அதிபதிகளை சனி பார்த்தால் சுக்கிரன், சனி 7ஆம் இணைந்திருந்தால் காதல் திருமணம் அமையும்.
  • லக்கினத்திற்கு 1, 5, 9யில் சுக்கிரன் இருப்பது மற்றும் சந்திரன், சுக்கிரன் இணைந்து நீர் இருந்தாலும் காதல் திருமணம் அமையும். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள ராசியும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் உள்ள ராசியும் ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஏற்படும்.
  • காதலுக்கான ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்