இந்த 6 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை இருங்க! முதுகில் குத்திவிடுவார்களாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

இன்றைய உலகம் துரோகம் நிறைந்த உலகமாகவே காணப்படுகின்றது. யார் யார் எப்படி இருப்பார்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு மாறி விட்டது இந்த உலகம்.

இந்நிலையில் ஜோதிடப்படி நல்ல நண்பர்கள் கிடைப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் போது சில ராசிகளில் பிறந்தவர்கள் நல்ல நண்பர்களை கூட தங்களின் பிறவி குணத்தால் இழந்து விடுவார்கள்

அந்த வகையில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் நண்பர்களை அதிகம் இழப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் இரண்டு புறம் இருக்கும். இவர்களுக்கு நட்பு எப்பொழுதும் முக்கியம்தான் ஆனால் இவர்களுக்குள் இருக்கும் மற்றொரு குணம் எப்பொழுதும் அந்த நட்பின் மீது அவர்களை சந்தேகப்படும் படி தூண்டும்.

பிறக்கும் போதே சந்தேக குணத்தை உடன் கொண்டு பிறந்தவர்கள் இவர்கள்.

எந்தவித நிபந்தனையுமின்றி நண்பர்களுடன் பழகுவது இவர்களால் முடியாத ஒரு காரியமாகும். மிகவும் அரிதாகவே இவர்கள் நண்பர்களுடன் மனம் விட்டு பழகுவார்கள்.

கும்பம்

நட்பு என்பது சுயநலமில்லாது ஒருவருக்கொருவர் உதவுவதும், ஆபத்தில் துணையாய் நிர்ப்பதும்தான். ஆனால் கும்ப ராசிகாரர்கள் இதற்கு நேர்மறையான குணம் கொண்டவர்கள்.

ஏனெனில் இவர்கள் எப்பொழுதும் சுயநலமான நண்பர்களாகவே இருப்பார்கள்.

தனது சுயநலத்திற்காக யாரையும் விட்டுக்கொடுக்க தயங்க மாட்டார்கள்.

அவர்களின் தேவைக்காக நீங்கள் தியாகம் செய்யப்படுவீர்கள், புறக்கணிக்க படுவீர்கள்,ஏன் தூக்கி எறிய படக்கூட வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

துலாம்

இவர்கள் எளிதில் துரோகம் செய்ய கூடியவர்கள், இவர்கள் எதையும் மதிக்க மாட்டார்கள் அவர்களின் நலனை தவிர. இவர்களுக்கு நண்பர்களாக இருப்பது மிகவும் கடினமாகும். இவர்களிடம் நட்பாக இருப்பவர்களுக்கு இவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்கள் கருத்துக்களுடன் ஒத்து போகிறவர்கள் கூட மட்டுமே நட்பாக பழகுவார்கள். ஆனால் உண்மையில் இவர்களுக்கு நட்பு என்ன என்பதே தெரியாது.

துலாம் ராசிக்காரர்களுடன் பழகுவது எப்படி நண்பராக இருக்க கூடாது என்பதற்கான ஆய்வாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுடன் பழகுவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் எப்பொழுதுமே தான் நட்பில் எப்படி பட்டவர்கள் என்பதை கூறிவிடுவார்கள்.

ஆனால் மற்றவர்கள்தான் அதனை விளையாட்டாக எடுத்துக்கொள்வார்கள். இதுதான் அவர்களுக்கு பிரச்சினையாக அமைகிறது.

அவர்கள் உங்கள் பேச்சுக்கள் மீதோ, உங்கள் நட்பு ஆர்வம் இல்லாமல் கட்டிக்கொண்டால் அவர்களை மேற்கொண்டு வற்புறுத்தாதீர்கள். அவர்களின் நேர்மையை நினைத்து சந்தோஷப்படுவதை தவிர வேறு வழியில்லை.

கடகம்

கடக ராசிக்காரர்கள் நட்பாக பழகுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வரை உங்களால் அதனை உணர முடியாது. நட்பாக இருப்பது போல பழகுவதற்கும், உண்மையாகவே நட்பாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

கடக ராசிக்காரர்கள் அன்பாக பேசவும், பழகவும் செய்வார்கள், ஆனால் நம்பிக்கை என்று வரும்போது இவர்கள் நம்பிக்கைக்கு தகுதி அற்றவர்கள். இவர்கள் தற்காலிக நண்பர்களாக இருக்க மட்டுமே சரியானவர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களை மோசமான நண்பர்கள் என்று கூற இயலாது, ஒருவேளை நீங்கள் அவர்களுடன் நீண்ட நாட்களாக நண்பராக இருந்தால் அவர்கள் உங்களுக்கு நல்ல நண்பராக இருக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசிக்காரர்கள் தங்களின் மனஉளைச்சலால் எளிதில் தங்கள் நட்பை முறித்து கொள்வார்கள். எனவே அவர்களுடன் நீண்ட கால நட்பை பற்றிய கனவை வளர்த்து கொள்ள வேண்டாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்