உங்கள் அருகில் இருப்பவர் ஆட்சி எண் மூன்றாக கொண்டவரா? அப்போ முதலில் இத படிங்க

Report Print Kavitha in வாழ்க்கை முறை

உங்கள் பிறந்த நாளை ஒற்றை இலக்காக எண்ணாக கணக்கிடுவதன் மூலம் உங்கள் ஆட்சி எண்ணை அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் எண் 3 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவரின் குணநலம் பற்றியும் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம்.

பொதுப்பண்புகள்

ஆட்சி எண் 3 ஐக் கொண்டவர், படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார்.

இவரின் தகவல் தொடர்பு ஆற்றல் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கவிதை, நடிப்பு, எழுத்து, கலை , இசை என்று எல்லாவற்றிலும் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய செயலை செய்து தன்னைச் சுற்றி இருப்பவரைக் கவரும் முயற்சியில் இறங்குவார். இதன் மூலம் அவரின் பன்முக ஆற்றல் மற்றவர்களுக்கு விளங்கும்.

எந்தவொரு விஷயத்தையும் செய்யாமல் சிவனே என்று அமரும் தன்மை இவர்களுக்கு சிறிதளவு கூட கிடையாது.

மற்றவர்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு இவர்களுக்கு மிகப் பெரிய வலிமையாக இருக்கும்.

மிகக் கடினமான யோசனைகளைக் கூட மிக எளிதாகவும் மிகப் பெரிய பிரயத்தனம் இல்லாமலும் இவர்களால் வெளிப்படுத்த இயலும்.

எண் 3 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவர்கள், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள்.

தியாக மனப்பான்மைக் கொண்டவர். மற்றவரின் நலனுக்காக தனது சௌகரியங்களை இழக்கவும் தயங்க மாட்டார்.

இவரின் கவர்ந்திழுக்கும் குணநலம், சுற்றி இருப்பவரை இவர் பக்கம் ஈர்க்கும். ஒட்டு மொத்தமாக கூறினால், வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நேர்மறை எண்ணத்துடன் வாழ்வார்.

பலவீனம்

மிகவும் சிறிய விஷயத்திற்கும் கோபம் கொண்டு தங்கள் உணர்ச்சிகளை இழந்து எரிச்சலடைவார்கள்.

கடினமான சூழ்நிலையில் , பித்து பிடித்தது போல் நடந்து கொள்வார்கள், மனச்சோர்வுக்கு ஆளாவார்கள்.

மறுபுறம், மிகுந்த நேர்மறைக் குணம் கொண்டவர்கள், பேசுவதை நிறுத்தவே மாட்டார்கள்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயங்கள் என்ன?
  • அதிர்ஷ்ட தனிமம் - ஆகாயம்
  • அதிர்ஷ்ட நாள் - செவ்வாய் மற்றும் வெள்ளி
  • அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
  • அதிர்ஷ்ட கல் - நீலக்கல்
  • அதிர்ஷ்ட எண் - 12
  • அதிர்ஷ்ட மாதம் - மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்
  • அதிர்ஷ்ட உலோகம் - தங்கம்
  • அதிர்ஷ்ட எழுத்து - C, G, L, மற்றும் S
  • அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்