இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு செட்டே ஆகாதாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி செட் ஆகாது என்று பார்ப்போம்.

மேஷம் மற்றும் ரிஷபம்

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உடனடியாக ஈர்க்கப்பட்டு விடுவார்கள். மேஷம் செவ்வாயாலும், ரிஷபம் சுக்கிரானாலும் ஆளப்படும் இராசியாகும்.

சாஸ்திரத்தின் படி இந்த இரண்டும் பொருத்தமான ஜோடிகள். ஏனெனில் செவ்வாய் சுக்கிரனை கட்டுப்படுத்த விரும்பும், சுக்கிரன் செவ்வாயிடம் அடங்கி போகும்.

ரிஷப ராசிக்காரர்கள் மேஷ ராசியிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம் ஆனால் நெருப்பின் சின்னமான மேஷம் ஒருபோதும் ரிஷப ராசிக்கு உண்மையாக இருக்காது.

இதனால் அவர்களுக்குள் பல பிரச்சினைகள் எழும். நம்பிக்கை இவர்கள் உறவுக்குள் சுத்தமாக இருக்காது.

மிதுனம் மற்றும் துலாம்

இவர்கள் இருவரும் அவர்களின் வசீகரத்தால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில் இருவரும் ஒரே கிரகத்தால் ஆளப்படுகிறார்கள்.

மிதுன ராசியின் குழப்பமான மனநிலையும், சமநிலையற்ற எண்ண ஓட்டமும் துலாம் ராசிக்காரர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் எந்தவொரு செயலின் மீதும் அக்கறையின்றி இருப்பது துலாம் ராசிக்கார்களுக்கு முற்றிலும் எதிர்மறையானது. இதனால் இவர்களுக்குள் பிரச்சினைகளும், வாக்குவாதங்களும் எழுவதோடு இவர்கள் உறவுக்கு வெளியே செல்லவும் வாய்ப்புள்ளது.

கடகம் மற்றும் மகரம்

இரு துருவங்கள் இங்கே ஈர்க்கப்படும். கடக ராசிக்காரர்களுக்கு மகர ராசிக்காரர்கள் கவனித்து கொள்வது மிகவும் பிடித்ததாகும்.

அதேசமயம் மிகவும் சீரியசான மகர ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களின் உணர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாது.

மகர ராசிக்காரர்கள் செய்ய முயற்சித்தாலும் கடக ராசிக்காரர்களுக்கு விரைவில் உறவுகள் போரடித்து விடும்.

குறிப்பாக கடக ராசிக்காரர்களின் பாலியல் ஆசைகளை மகர ராசிக்காரர்கள் ஒருபோதும் பூர்த்தி செய்யமாட்டார்கள். இதனால் அவர்கள் உறவிற்கு வெளியே செல்ல முயற்சிப்பார்கள்.

சிம்மம் மற்றும் தனுசு

இவர்கள் இருவருமே நெருப்பின் சின்னங்கள் மற்றும் இருவருமே ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள கூடியவர்கள்.

சிம்ம ராசியின் படுக்கையறை திறமைகள் அவர்களின் துணைக்கு போதுமானதாக இருக்காது, இதனால் அவர்களின் துணை வெளியில் செல்ல முயற்சிப்பார்கள்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் எழும், ஒன்றாக நேரம் செல்வழிப்பதையே தவிர்ப்பார்கள்.

தனுசு ராசிக்கார்கள் சிம்ம ராசியின் அன்பிற்கு எப்பொழுதும் உண்மையாக இருக்கமாட்டார்கள்.

விருச்சிகம் மற்றும் மீனம்

இந்த இரண்டு ராசிகளும் ஒருவருக்கொருவர் சரியான ஜோடி என்று வெளியில் இருந்து பார்த்தால் தோன்றலாம் ஆனால் உண்மையில் இவர்கள் அப்படியல்ல. இவர்கள் இருவருமே தங்களின் நலனை மட்டுமே பெரிதாக நினைப்பவர்கள் ஆவர்.

இவர்களிடையே பொய், துரோகம் போன்றவையெல்லாம் ஒருபக்கம் இருந்து மட்டும் வராது, இருவருமே ஒருவருக்கொருவர் பொய் கூறி கொள்வார்கள்.

அவர்களாகவே பிரிந்தும் சென்று விடுவார்கள். என்ன கொடுக்கிறோமோ அதைத்தான் பெறுவோம் என்பதற்கு இந்த ஜோடி பொருத்தமான உதாரணமாகும்.

கும்பம் மற்றும் கன்னி

இருவருமே வித்தியாசமான ஆற்றல்கள், ஆனால் இவர்களுக்குள் ஒற்றுமையும் உண்டு. இவர்கள் இருவரும் அறிவார்ந்த சிந்தனைகளில் ஒத்துப்போவார்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியினரின் அப்பாவித்தனத்தின் மீது உடனடி ஈர்ப்பு ஏற்படும், கன்னி ராசிக்காரர்களும் கும்ப ராசியினரிடம் விரைவில் விழுந்து விடுவார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் கும்ப ராசிக்கார்களை சமாளிக்க மிகவும் சிரமப்படுவார்கள், இவர்களுடையேயான ஈர்ப்பும் கொஞ்சம் காலம்தான். இதனால் விரைவிலேயே இவர்கள் பிரிந்து விடுவார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்