இந்த ஐந்து ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர்களாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில வசீகரமான ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்கார்களுக்கு என்று பார்ப்போம்.

தனுசு

தேவையில்லாத நாடகங்களையும், மோதல்களையும் தனுசு ராசிக்காரர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எப்பொழுதும் கூலாகவும், ஜாலியாகவும் இருக்கும் இவர்கள் மற்றவர்கள் மீது மிகவும் குறைவாகவே புகாரளிப்பார்கள்.

ஒரு பிரச்சினை திடீரென எழுந்தால் இவர்கள் எப்பொழுதும் அதற்கான தீர்வுடன் வருவார்கள் அல்லது அந்த பிரச்சினையை வேறு கோணத்தில் இருந்து பார்ப்பார்கள்.

எந்தவொரு மோசமான சூழ்நிலையிலும் இருக்கும் சாதகமான வாய்ப்பைத்தான் பார்ப்பார்கள். இவர்களின் நம்பிக்கை உணர்வும், சாகச குணமும் இவர்களை அனைவருக்கும் பிடித்தவர்களாக மாற்றும்.

துலாம்

துலாம் ராசிகாரர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு வக்கீல் போல செயல்படுவார்கள் அனைவரையும் ஆதரிப்பவராக இருப்பார்கள்.

அனைவரிடத்திலும் இருக்கும் நல்ல குணங்களை பார்க்கும் இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை உற்சாகப்படுத்துபவராக இருப்பார்கள். இவரை போன்றவர்கள் நம் அருகில் இருக்கும்போது நமது நம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இவர்கள் எப்பொழுதும் பிரச்சினைகளை தொடங்குபவராக இருக்கமாட்டார்கள்.

எப்பொழுதும் மற்றவர்களுடன் ஒத்துப்போகும் இவர்கள் தங்கள் சூழ்நிலையை மகிழ்ச்சியானதாக வைத்து கொள்ள விரும்புவார்கள். தனது கோணத்தில் மட்டுமின்றி மற்றவர்களின் கோணத்திலும் சிந்திப்பதாலேயே இவர்களை அனைவருக்கும் பிடிக்கும்.

கும்பம்

இவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் அதனாலாயே இவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை பற்றி நல்லதாகவே சிந்திப்பார்கள் மேலும் தன் மனதில் படுவதை அப்படியே கூறுபவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்கள் மீது எப்பொழுதும் உண்மையான அக்கறையுடன் இருக்கும் இவர்கள் அவர்களின் காயங்களில் இருந்து வெளியேற்ற எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள். இவர்களின் துணையும், அக்கறையும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு தேவைப்படுவதாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்கும் காரணம் இவர்கள் அனைவரின் பேச்சையும் கவனிப்பதுதான்.

இவர்களின் பேச்சற்றல்தான் இவர்களின் சிறந்த பரிசாகும். அவர்கள் மற்றவர்களின் பேச்சை கேட்பது மட்டுமின்றி அதன்மீது உண்மையான அக்கறையும் செலுத்துவார்கள்.

ஒருவேளை இவர்களின் நண்பர்கள் இவர்களிடம் ஏதாவது பிரச்சினை என்று கூறினால் அவர்களை முழுவதும் அதிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சிப்பார்கள். இவர்களின் நேர்மையான விமர்சனங்களும், மற்றவர்களை சிரிக்க வைக்கும் குணமும் அனைவரையும் இவர்களை விரும்பவைக்கும்.

மீனம்

இவர்கள் மற்ற ராசிக்காரர்களை விட அதிகம் விரும்ப படுபவர்களாக இருப்பார்கள். அன்பு, காதல், இரக்கம் என பல நல்ல குணங்கள் நிரம்பியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

எப்பொழுதும் குழுவாக இருப்பதை விரும்பும் இவர்கள் இரண்டாவது வாய்ப்பு தர ஒருபோதும் தயங்கமாட்டார்கள். இவர்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இருப்பார்கள், இதனால் மற்றவர்கள் மீது எப்பொழுதும் இரக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்கள் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறையை இவர்களின் பேச்சுக்கள், செயல்கள் என அனைத்தும் நிரூபிப்பதாக இருக்கும். அக்கறை செலுத்துபவர்கள் அருகில் இருக்கும்போது இவர்கள் அதிக மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்