ஆண்களே! காதலில் அதிகம் விட்டுக்கொடுப்பார்கள் இந்த ராசி பெண்கள் தானாம்

Report Print Kavitha in வாழ்க்கை முறை

12 ராசிகளுள் எந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் காதலை காப்பாற்றிக்கொள்ள அதிகம் விட்டுக்கொடுப்பார்கள் என்று தற்போது இங்கு பார்ப்போம்.

ரிஷபம்

காதலை பொறுத்தவரை ரிஷப ராசி பெண்கள் எப்பொழுதும் மற்ற ராசி பெண்களை விட அதிகம் விட்டுக்கொடுப்பவர்களாக இருப்பார்கள். காதல் மூலம் கிடைக்கும் அனைத்து மகிழ்ச்சியையும் பெற வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் ரிஷப ராசி பெண்கள் சக்தி அல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல உண்மையில் அவர்கள் மிகுந்த சக்திசாலிகள்தான்.

இவர்கள் தங்களின் உணர்ச்சிகளை விட காதலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களின் பொறுமைதான் எப்பொழுதும் இவர்களின் உறவை பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி பெண்கள் எப்பொழுதும் முடிவெடுக்க விரும்ப மாட்டார்கள் குறிப்பாக காதலை பொறுத்தவரை. எப்போதாவது மட்டும்தான் இவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு இவர்கள் தன்னை மாற்றிக்கொள்வார்கள், எனவே எப்போதும் முடிவெடுக்கும் உரிமையை தங்கள் காதலனுக்கு விட்டு கொடுத்துவிடுவார்கள். உண்மையில் காதலனுக்கு அடிபணிந்து இருப்பது இவர்களுக்கு பதட்டம் மற்றும் கவலையில் இருந்து தப்பிக்க உதவும் வழியாகும்.

கன்னி

கன்னி ராசி பெண்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உடையவர்கள், இதனாலேயே இவர்களின் ஆசைகள் பெரும்பாலும் காதலில் செயலற்றதாக ஆகிவிடும்.

இவர்களின் முடிவுகள் மீது இவர்களுக்கே இருக்கும் சந்தேகத்தால்தான் எப்பொழுதும் இவர்கள் முடிவெடுக்கும் உரிமையை தன் துணைக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

அவ்வாறு இருக்கும்போது இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தன்னுடைய பணிவு தன்னுடைய நேர்மைக்கான அடையாளம் என்று இவர்கள் எண்ணுவார்கள்.

துலாம்

துலாம் ராசி பெண்கள் எப்பொழுதும் உறவில் மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். துலாம் ராசி பெண்கள் சிறந்த ராஜதந்திரிகள் அதனாலேயே அவர்கள் எப்பொழுதும் முடிவெடுக்கும் திறமையை காதலனுக்கு கொடுத்து விடுகிறார்கள்.

தன்னுடைய சரியான் நேரத்திற்காக இவர்கள் காத்திருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் காத்தாளில் அடிபணிந்து போகமாட்டார்கள் ஆனால் இவர்களால் காதலில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது என்று உறுதியாக கூறலாம்.

மீனம்

மற்ற ராசி பெண்கள் அடிபணிந்து போவதை கடமையாக நினைப்பார்கள் ஆனால் மீன ராசி பெண்கள் தங்கள் துணைக்கு அடிபணிந்து இருப்பதையும் காதலனை சக்திவாய்ந்தவராக உணரவைப்பதையும் இவர்கள் மகிழ்ச்சியாகவே செய்வார்கள்.

இவர்கள் தங்களின் துணைக்கு கொடுக்கும் உரிமைதான் தங்கள் காதலை நிரூபிக்கும் வழி என்று இவர்கள் நினைப்பார்கள்.

மீன ராசி பெண்கள் தன்னலமற்றவர்களாகவும், அதிக இரக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் துணை இவர்கள் மேல் அதீத அக்கறை காட்டுவார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers