இந்த ஐந்து ராசிக்காரர்களும் கதை விட்டே அனைவரையும் கவுத்து விடுவார்களாம்... இதில் உங்கள் ராசியும் இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிகம் பழகுவதில்லை என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு ஏனெனில் அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இவர்கள்தான் முக்கியமானவராக இருப்பார்கள்.

இவர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பதுடன் நன்றாக பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் பற்றிம் அனைத்தையும் பற்றி பேசக்கூடியவர்கள்.

மிதுன ராசிக்காரர்கள் தன்னை சுற்றி ஆட்கள் இருக்கும் போது அதிக உற்சாகமாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் கதைகள், ஜோக்குகள், தனிப்பட்ட விஷயங்கள் என அனைத்திற்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும்.

சிம்மம்

பொதுவாகவே சிம்ம ராசிக்கார்கள் எதையும் மறைக்க தெரியாதவர்கள், தங்கள் மனதில் இருப்பதை இந்த உலகிற்கு எப்போதும் கூற வேண்டும் என்று நினைப்பார்கள்.

சிம்ம ராசிக்காரர்களின் தனிப்பட்ட காந்தசக்தி மற்றும் அவர்களின் ஆளுமை, வசீகரம் போன்றவை அனைவரையும் ஈர்க்கும்.

மிதுன ராசிக்காரர்களை போலவே இவர்களும் அதிக வெளிப்படையானவர்கள் ஆனால் இவர்கள் அதிக நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் மிகைப்படுத்தி கூறமாட்டார்கள் உள்ளதை கூறியே அனைவரையும் ஈர்ப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதும் தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், அந்நியர்கள் என அனைவரிடமும் பேச விரும்புவார்கள் சிலசமயம் அவர்களுடனேயே பேசிக்கொள்வார்கள்.

இவர்கள் மற்றவர்களுடன் பேசும் பேச்சு மற்றவர்களுடன் அதிக பிணைப்பை உருவாகும் என்று இவர்கள் அறிவார்கள். ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்போது இவர்கள் அதனை பற்றிய அனைத்தையும் பேசுவார்கள்.

தான் பேசும் அனைத்து விவாதங்களிலும் நேர்மையாகவும் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாகவும் கூறுவார்கள். அவர்களை பற்றிய விஷயங்களை மற்றவர்கள் கேட்காமலே இவர்கள் கூறிவிடுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்கும் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் இவர்களின் வெளிப்படை தன்மைதான்.

அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தை பற்றியோ அவர்களுக்கு தெரியாத விஷயத்தை பற்றியோ இவர்கள் பேசமாட்டார்கள்.

இவர்கள் நகைசுவையானவர்கள் அதேசமயம் நேர்மையானவர்களும் கூட. புதிய விஷயங்களை பற்றி பேசும் போது இவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பார்கள்.

இவர்கள் என்ன பேச போகிறார்கள் என்பதை ஒருபோதும் கணிக்க இயலாது, ஏனெனில் இவர்கள் பேசுவது அனைத்தும் இவர்களின் உண்மையான கருத்தாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கார்கள் நன்றாக கதை சொல்லக்கூடியவர்கள், ஆனால் இவர்கள் கூறும் கதையில் பல கற்பனைகள் கலந்திருக்கும்.

ஒரு கூட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் இருந்தால் அங்கு பொழுது போக்கிற்கு பஞ்சமே இருக்காது.

இவர்கள் கூறும் கதைகள் எப்பொழுதும் சாகசங்கள் நிறைந்ததாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

தாங்கள் கூறும் கதையை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துவதில் இவர்கள் வல்லவர்கள். வார்த்தைகளை விட இவர்களின் முகபாவங்களே பல கதைகளை கூறும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்