உங்க விதி எண் படி இந்த வயதில்தான் அதிர்ஷ்டம் கூரைய பிச்சிகிட்டு தேடிவருமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

இந்து மதத்தின் பழமையான சாஸ்திரங்களில் அங்க சாஸ்திரமும் ஒன்றாக கருதப்படுகின்றது.

அங்க சாஸ்திரத்தின் படி எந்த வயதில் உங்களுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

விதி எண் 1

இந்த எண்ணின் ஆளும் கிரகம் சூரியன் ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்கள் 22 மற்றும் 34 வது வயதில் பெரிய வெற்றியை அடைவார்கள்.இந்த வயதில் அவர்களின் வெற்றி வாய்ப்பு அவர்களை தேடிவரும்.

விதி எண் 2

இந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சந்திரன் ஆகும். இந்த விதி எண்ணில் பிறந்தவர்கள் 24 மற்றும் 38 வயதில் வெற்றியை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் பணரீதியாகவும், வெற்றிரீதியாகவும் சிறப்பான இடத்தை அடைவார்கள்.

விதி எண் 3 மற்றும் 5

வியாழன் மற்றும் புதன் கிரகம் ஆளும் கிரகமாக இருப்பதாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதாலும் இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்கள் கையில் அதிக பணம் புரளும்.

விதி எண் 4

இந்த எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் ராகு ஆகும். அங்க சாஸ்திரத்தின் படி இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 36 ஆகும். இவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் அவர்களுக்கு இந்த வயதில் கிடைக்கும்.

விதி எண் 6

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களின் ஆளும் கிரகம் சுக்கிரன் ஆகும். இவர்கள் 25 வயதிலேயே வெற்றியை அடைவார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் 27 மற்றும் 32 வயதில் கிடைக்கும்.

விதி எண் 7

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் கேது ஆகும். இவர்களுக்கு 20 வயதுகளில் வெற்றி கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாகும்.

30 வயதுகளில் அதிர்ஷ்டக்காத்து இவர்களுக்கு ஆரபித்தாலும் 38 மற்றும் 40 வயதில் இவர்கள் உச்சத்தை அடைவார்கள்

விதி எண் 8

இந்த எண்ணில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் சனி ஆகும். இவர்கள் 36 மற்றும் 42 வயதில் வெற்றியை அடைவார்கள். தொழில்ரீதியாகவும், பணரீதியாகவும் இந்த ஆண்டுகள் அவர்களுக்கு அதிகம் இலாபத்தை வழங்குவதாக இருக்கும்.

விதி எண் 9

இந்த விதி எண்ணில் பிறந்தவர்களை ஆள்பவர்கள் செவ்வாய் கிரகம் ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களின் வெற்றிக்கான வயது 28 ஆகும். இந்த வயதில் இவர்கள் அதிக புகழையும், செல்வத்தையும் அடைவார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்