நீங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவரா? உங்க குணநலன்கள் எப்படினு தெரியனுமா? அப்போ இதை உடனே படிங்க

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஒவ்வொரு மாதத்திலும் பிறந்தவர்களுக்கு வெவ்வேறு குணம் கொண்டவர்களாக காணப்படுவார்.

அந்தவகையில் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனிமையை விரும்புபவர்கள்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை அதிகம் விரும்புவார்கள். இவர்கள் தனிமையை விரும்புபவர்கள் அதனால் தங்களுக்கான நேரம் மற்றும் இடம் இவர்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.

இவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.

தனிமையில் இருப்பது அவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது, தனிமையில்தான் தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

எப்பொழுது சரியானவர்கள்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விரும்பமாட்டார்கள்.

ஆனால் தங்களிடம் பொய் சொல்பவர்களிடம் அவர்கள் கூறுவது பொய் என்று நிரூபிக்க விரும்புவார்கள்.

அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள்

இவர்கள் அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள் எனவே மற்றவர்களின் மனதை இவர்கள் எளிதில் படித்து விடுவார்கள்.

எனவே ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுடன் பழகும் போது அவர்களிடம் பொய் கூற முயற்சிக்காதீர்கள்.

அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது வெற்றிபெற முயற்சிக்காதீர்கள்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்

இவர்களின் தொடர்ச்சியான மனநிலை மாற்றங்கள் இவர்களை சிலசமயம் முரட்டுத்தனமானவர்களாக மாற்றும்.

குறிப்பாக உணர்ச்சிகரமான காலங்களில் அவற்றைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

இவர்களின் இந்த உணர்ச்சி வெடிப்புகள் எப்பொழுது வேண்டுமென்றாலும் தூண்டப்படலாம். பெரும்பாலும் இது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.

உணர்வை நேருக்கு நேர் பகிர்ந்து கொள்ள தயங்குவார்கள்

இவர்கள் தங்களின் உணர்வுகளை நேருக்கு நேராக வெளிப்படுவதுவதை விட எழுத்தில் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.

ஆகஸ்டில் பிறந்தவர்கள் தங்கள் உள் உணர்வுகளை மற்றவர்களுடன் நேருக்கு நேர் உரையாடலில் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சங்கடமாக உணர்வார்கள்.

இதனால்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் பேசுவதற்கும், எழுதுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

இவர்கள் தங்கள் வலியையும் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்.

இவர்களை எளிதில் ஈர்க்க முடியாது

ஆகஸ்ட் பிறந்தவர்கள் காதலில் உயர் தரங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பாசத்தின் மீது மிகவும் கவனமாக இருப்பார்கள், அதனால் அதனை எளிதில் மற்றவர்களுக்கு கொடுத்து விடமாட்டார்கள்.

இதனால் இவர்களை மற்றவர்கள் சுயநலவாதிகள் என்று நினைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவர்கள் தங்களின் நண்பராக இருக்க தகுதியானவர்களிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவார்கள்.

எல்லாரலும் தன்னை சமாளிக்க முடியாது என்று இவர்களுக்கு நன்கு தெரியும். அதேசமயம் இவர்களுக்கு நண்பராகி விட்டால் உங்கள் மீது அதீத அன்பைப் பொழிவார்கள்.

பணத்தை விஷயத்தில் சரியாக இருப்பவர்கள்

இவர்கள் நிதி மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள், அதனால் இவர்களை ஒருபோதும் நீங்கள் கடனில் பார்க்க முடியாது.

இவர்கள் எப்பொழுதும் தனது தேவைகளுக்கு தன்னை நம்பி இருப்பவர்கள் அதனால்தான் இவர்கள் பண விஷயத்தில் சரியாக இருக்கிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் பணஉதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்.

பிடிவாதக்காரர்கள்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தனிமையை விரும்புவார்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள் என்று நமக்கு நன்கு தெரியும்.

ஆனால் மனமுடைந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள். அப்பொழுதும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

ஈகோ உள்ளவர்கள்

தன்னுடைய உணர்ச்சிமிக்க பக்கத்தை காண்பிக்க இவர்களுக்கு அதிக ஈகோ இருக்கும். அதனை அனைவரிடமும் காட்டுவதையும் இவர்கள் விரும்பமாட்டார்கள்.

இந்த பிடிவாதம் அவர்களுக்கு நல்லதல்ல. அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைத்தால் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

வசீகரமானவர்கள்

இவர்களிடம் இருக்கும் வசீகரம் காந்த சக்தியாக மற்றவர்களை ஈர்க்கும். இவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் கவர்ச்சியான இருப்பு அனைவரையும் இவர்களை நோக்கி திருப்பும்.

இவர்களின் தோற்றமும் அனைவரையும் கவர்வதாக இருக்கும். ஆனாலும் இவர்கள் அனைவரையும் தங்கள் அருகில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

மனவலிமை உள்ளவர்கள்

சூழ்நிலை இவர்களுக்கு சாதகமானதாக இல்லை என்றாலும் இவர்களின் மனவலிமை இவர்களை தளரவிடாது.

எந்ஸ் எல்லைக்கும் சென்று அதனை முடிக்க இவர்கள் தயாராய் இருப்பார்கள். இவர்களால் எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.

சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள்

இவர்கள் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானவர்களாகவும் மற்றும் வெற்றிகரமானவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் சக்திவாய்ந்த இடத்தில் இருக்க விரும்புவார்கள்.

அவர்கள் இருக்கும் சூழ்நிலையை பொறுத்து அவர்கள் சக்தியையும், புகழையும் அடைவார்கள். இவர்களின் செல்வாக்குமிக்க ஆளுமை மூலம் மற்றவர்களையும் இவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்