அழகிய பெண்கள் இப்படிப்பட்ட ஆண்களைதான் கணவராக அடைய ஆசைப்படுவார்களாம்! ஏன் தெரியுமா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிடப்படி பெண்கள் அவர்களின் ராசிப்படி எப்படிப்பட்ட கணவனை எதிர்பார்க்கிறார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி பெண்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்கள் சாகசங்களை விரும்பும் ஆண்களை எதிர்பார்ப்பார்கள், வீடியோ கேம்ஸ் விளையாட அதிகம் விரும்பும் ஆண்களையும் இவர்கள் விரும்புவார்கள்.

இவர்கள் தங்கள் கணவன் எப்பொழுதும் வேடிக்கையாகவும், கோபப்படாமலும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

ரிஷபம்

தன்னம்பிக்கையும், மனவலிமையும் நிறைந்தவர்கள் ரிஷப ராசி பெண்கள். இவர்கள் சுதந்திரமான, நிலையான மனநிலையுடைய ஆண்களை விரும்புவார்கள்.

இவர்கள் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

பார்ப்பதற்கு சுமாராக இருந்தாலும் வலிமையான, பக்குவமான, புத்திசாலி ஆண்களை இவர்கள் விரும்புகிறார்கள்.

மிதுனம்

மிதுன ராசி பெண்கள் வித்தியாசமான சிந்தனைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் " கெட்ட ஆண்களை " விரும்புவார்கள்.

சிலசமயம் மோசமாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளும் ஆண்களை விரும்புகிறார்கள்.

ஆனால் அடிப்படையில் அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

கடகம்

கடக ராசி பெண்கள் மிகவும் உணர்ச்சிகரமானவராக இருப்பார்கள். எனவே இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மதிக்கும் மற்றும் தங்கள் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் ஆண்களை விரும்புகிறார்கள்.

தங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள கூடிய தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஆண்களை விரும்புவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசி பெண்கள் சிறந்த தொலைநோக்கு எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் தங்கள் மீது அதிகம் கவனத்தை எதிர்பார்ப்பார்கள், தனக்கு எப்பொழுதும் ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்கும் ஆண்களை விரும்புவார்கள்.

தனக்கு சொந்தமான வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் ஆண்களை அவர்கள் விரும்புவார்கள்.

கன்னி

கன்னி ராசி பெண்கள் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

தங்களின் பெண்மையை மதித்து அதனுடன் ஒத்துப்போகும் ஆண்களை விரும்புவார்கள். கணவர் கண்டிப்பாக புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

துலாம்

துலாம் ராசி பெண்கள் நகைச்சுவையான மற்றும் புத்திசாலியான பெண்களாக இருப்பார்கள்.

துலாம் ராசி பெண்கள் வேடிக்கையான மற்றும் அனைவருடன் நன்கு பழகும் ஆண்களை விரும்புவார்கள்.

இவர்கள் போரடிப்பதை எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள், எனவே அவ்வாறு பார்த்துக்கொள்ளும் அதேசமயம் பக்குவமான ஆண்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

விருச்சிகம்

இவர்கள் எப்பொழுதும் தனித்துவமானவர்கள். பாலியல் உறவில் அதிக சுறுசுறுப்ப்பான ஆண்களை இவர்கள் விரும்புவார்கள்.

தங்களை குழந்தையை போல பார்த்துக்கொண்டு தேவைகளை பூர்த்தி செய்யும் ஆண்களை இவர்கள் விரும்புகிறார்கள்.

தனுசு

தனுசு ராசி பெண்கள் அதிக பயணங்களை விரும்புவார்கள், எனவே தங்களின் ஆசையை புரிந்து கொண்டு தன்னைப் போலவே சிந்திக்கும் ஆண்களை இவர்கள் விரும்புவார்கள்.

சாகசமும், வேடிக்கையும் உள்ள ஆண்களை இவர்கள் அதிகம் விரும்புவார்கள்.

மகரம்

மகர ராசி பெண்கள் ஆழமான சிந்தனை உள்ளவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் படைப்பாற்றல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும், எனவே அவர்கள் காலையில் ஆர்வம் உள்ள ஆண்களை விரும்புவார்கள்.

இவர்கள் தங்களின் திறமையை உலகிற்கு காட்டும் ஆண்களை கணவனாக அடைய வேண்டும் என்று விரும்புவார்கள்.

கும்பம்

கும்ப ராசி பெண்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், மற்றவர்களின் உள்நோக்கிய சிந்தனையாளராகவும் இருப்பார்கள்.

எனவே இவர்கள் தங்களின் குணத்திற்கு எதிர்மறையாக நிறைய பேசக்கூடிய, எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய ஆண்களை விரும்புவார்கள்.

மீனம்

இவர்கள் கலைஞர்களை விரும்புபவர்கள், கலையை சாராத ஆண்கள் இவர்களை நெருங்கவே முடியாது.

எனவே தன்னைப்போலவே ஆர்வம் உள்ள ஒருவரை இவர்கள் விரும்புவார்கள்.

இவர்களை போலவே குணம் கொண்ட ஆண் கணவராக கிடைக்கும் போது அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்ததாக இருக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்