இந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க... அநாகரீகமாக நடந்து கொள்வார்களாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக காணப்படுவார்.

அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் எந்த வகையிலாவது அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்ந்தால் அவர்கள் தங்களின் பழிவாங்கும் எண்ணத்தை எக்காரணம் கொண்டும் கட்டுப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் மிகவும் பணிவானவர்களாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் ஈகோவை யாராவது தீண்டிவிட்டால் உடனடியாக வெடித்து விடுவார்கள்.

இவர்கள் பொதுவாக அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று இவர்கள் உணரும்போது மிகவும் மோசமாக நடந்து கொள்வார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் குறுகிய புத்தி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை மற்றவர்கள் பாராட்டாமல் இருந்தாலோ அல்லது மரியாதை கொடுக்காவில்லை என்றாலோ அவர்கள் அதிகபட்ச எதிர்மறையாக நடந்து கொள்வார்கள்.

இவர்கள் மிகவும் மனக்கிளர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள், அதனால் இவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

இவர்களின் திமிர் காரணமாக தாங்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க இவர்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.

இவர்களின் பொறுமையின்மை காரணமாக இவர்கள் பெரும்பாலும் அநாகரீமாக நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் வருத்தமாக இருந்தால் அவர்கள் எதைப்பற்றியும் கவலை படமாட்டார்கள்.

அதனால் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் செயலில் இறங்கி விடுவார்கள். அவர்கள் கோபப்பட்டால் யார்மீது கோபமோ அவர்கள் அதனை அனுபவித்தே ஆக வேண்டும்.

அதனால் மற்றவர்கள் அவமானப்படுவதைப் பற்றியோ அல்லது சங்கடமாக இருப்பது பற்றியோ இவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

இந்த நிலையில் இருக்கும்போது இவர்கள் அவர்களை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்களே தவிர மற்றவர்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அமைதியானவர்களாக தோன்றலாம், ஆனால் அவர்களுக்கு மரியாதையோ, பழக்கவழக்கங்களோ இல்லை.

தங்களின் அநாகரீகமான செயலுக்கு ஒருபோதும் இவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்.

மற்றவர்கள் கவலையாக இருக்கும்போது இவர்கள் தங்களின் சொந்த செயல்களில் அக்கறை காட்டுவார்கள், ஏனெனில் இவர்களுக்கு அதனைப் பற்றி கவலையில்லை.

நன்றி கூறுவதோ, மன்னிப்பு கேட்பதோ இவர்களுக்கு என்னவென்று தெரியாது.

கும்பம்

இவர்கள் பொறுமையற்றவராக இருப்பார்கள் மேலும், இவர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.

மற்றவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதோ, மரியாதையின்றி நடந்து கொள்வதோ இவர்களுக்கு சாதாரணமான ஒன்றாகும்.

மற்றவர்கள் பேசும்போது இடையில் நாகரீகம் இன்றி பேசி இவர்களுக்கு எந்தவித தயக்கமும் இருக்காது.

மற்றவர்கள் சொல்ல வருவது என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்