நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்? உங்களுக்குள் பெரிய சக்தி ஒளிந்து இருக்குமாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் ஒரு குணமும், சக்தியும் உள்ளது.

அந்தவகையில் உங்கள் நட்சத்திற்கு ஏற்றப்படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அதிசக்திகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரம் இரட்டை குதிரை வீரர்களான அஸ்வினி தேவர்களால் நிர்வகிக்கப்படும் நட்சத்திரமாகும்.

இவர்கள் எந்த காரியத்தையும் விரைவாக முடிக்கும் திறமை கொண்டவர்கள்.

மேலும் இவர்களின் அடிப்படை திறமை விரைவில் காயங்களை குணப்படுத்துவதாகும்.

இவர்கள் மற்றவர்களின் காயங்களுக்கு மருந்தாக இருப்பார்கள்.

பரணி

பரணி நட்சத்திரத்தை ஆள்வது மரணத்தின் கடவுளான எமன் ஆவார். அனைத்தையும் அப்புறப்படுத்தும் ஆற்றல் இவர்களுக்கு உள்ளது.

எமதர்மனின் பணியே ஆன்மாவை உடலில் இருந்து பிரித்து மேல் உலகத்திற்கு அழைத்துச் செல்வதாகும்.

இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் எப்போதும் மற்ற உலகத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படுவார்கள்.

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரம் நெருப்பின் கடவுளான அக்னி தேவனால் ஆளப்படுகிறது.

எரிக்கும் மற்றும் ஆன்மாவை சுத்தப்படுத்தும் வேலையை இவர் செய்கிறார். வெப்பமும், ஒளியும் இவர்களின் அடையாளம் ஆகும்.

ரோகிணி

ரோகினி நட்சத்திரத்தை ஆள்பவர் பிரஜாபதி ஆவார். படிப்பின் ஆற்றலாக இவர்கள் இருக்கிறார்.

தாவரங்கள் மற்றும் நீரின் ஆதரமாக இவர்தான் இருக்கிறார்.

இந்த நட்சத்திரம் கொண்டவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாகவும் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மிருகசிரீஷம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தை சந்திரனின் கடவுளும், அமிர்தத்தின் அதிபதியும் ஆன சோமா ஆள்கிறார்.

இவரின் ஆற்றல் பரிபூரண தன்மையை வழங்குவதாகும்.

நம் வாழ்க்கையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவது இவர்தான்.

மிருகசீரிஷ நட்சத்திரத்தின் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் இன்பம் நிறைந்திருக்கும்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானின் கோபமான இடியை பிரதிபலிக்கும் ருத்ரனால் ஆளப்படுகிறது.

இந்த நட்சத்திரம் இருப்பவர்கள் நெருப்பு போல இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும்.

இவர்களின் முயற்சியும், தேடலும் இவர்களை உயரத்திற்கு அழைத்து செல்லும்.

புனர்பூசம்

புனர்பூச நட்சத்திரம் தாய் தெய்வமான அதிதியால் ஆளப்படுகிறது.

இவர்களுக்கு தேவையான பொருளும், புகழும் இவர்களை தானாக வந்தடையும்.

இவர்கள் அதிக கற்பனைத்திறன் உடையவர்களாகவும், நண்பர்களிடையே அதிக செல்வாக்கு உடையவர்களாகவும் இருப்பார்கள்.

பூசம்

பூச நட்சத்திரத்தை தெய்வீக ஞானத்தின் கடவுள் ப்ரிஹாஸ்பதி ஆளுகிறார்.

இவர்கள் இறை பக்தியில் சிறந்தவர்களாகவும், தியாகம் செய்ய தயநகத்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த குருவாக இருப்பார்கள்.

ஆயில்யம்

ஆயில்ய நட்சத்திரம் நாக கடவுளால் ஆல்படுவதாகும். இவர்கள் விஷத்தை செலுத்தும் தன்மை கொண்டவர்கள்.

இவர்களின் அணுகுமுறையும் பாம்பை போலவே இருக்கும்.

தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இவர்களுக்குள் இருக்கும்.

இவர்கள் தங்களின் எதிரிகள், தடையாக இருப்பவர்கள் என அனைவரையும் அழிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

மகம்

மக நட்சத்திரம் மூதாதையர்களால் ஆளப்படுகிறது. இவர்கள் அதிக சோகத்திற்கு ஆளாபவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்கள் மூதாதையர்களுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பூரம்

பூரா நட்சத்திரத்தை ஆள்வது ஒப்பந்தங்களின் அதிபதியான ஆரியமான் ஆவார்.

இவர்கள் தொழிலார்களின் முன்னேற்றத்திற்கு உதவுபவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். சிவன் மற்றும் பார்வதியின் திருமணம் பூரா ஆண்டில்தான் நடந்தது.

அஸ்தம்

அஸ்த நட்சத்திரம் சவிதரால் ஆளப்படுகிறது. இவரின் சக்தி என்னவென்றால் தேடி செல்வதை நம் கைக்கு கொண்டு வருவது.

அதுபோல்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இவர்கள் தேடிச்செல்லும் பொருள் இவர்களை தேடிவரும்.

குறையில்லா வாழ்வை பெறும் வரம் பெற்றவர்கள் இவர்கள்.

உத்திரம்

உத்திர நட்சத்திரம் மகிழ்ச்சியின் கடவுளான பாகாவால் ஆளப்படுகிறது.

இவர்களுக்கு திருமணம் நடந்த பிறகுதான் வாழ்க்கையில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இவர்கள் வாழ்க்கைத்துணை மூலம் இவர்கள் எண்ணற்ற பலன்களை அனுபவிப்பார்கள்.

இவர்களின் வாழ்க்கையில் செல்வத்திற்கு எந்த குறைச்சல் இருக்காது.

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தை கைவினைஞரான தவாஷ்டர் ஆளுகிறார்.

தனக்கான தேவையை தனது திறமை மூலம் குவிக்கும் சக்தி கொண்டவர்கள் இவர்கள்.

தர்மத்தை கடைபிடிக்கும் இவர்கள் நேர்மையான வழியில் புகழை அடைவார்கள்.

இவர்களின் படைப்பாற்றல் இவர்களின் சந்ததிக்கே பெருமை சேர்க்கும்.

ஸ்வாதி

ஸ்வாதி நட்சத்திரம் காற்றின் கடவுளான வாயுபகவானால் ஆளப்படுகிறார்.

இவர்களின் வாழ்க்கை மனம் போகும் வழியில் பல்வேறு திசைகளில் பயணிக்கும்.

இவர்கள் வாழ்க்கை பல மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். இவர்கள் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு அதில் வெற்றியை பெரும் ஆற்றல் கொண்டவர்கள்.

விசாகம்

விசாக நட்சத்திரத்தை ஆள்வது இந்திரனும், அக்னி தேவனும் ஆவர்.

இந்த இரண்டு சக்தி வாய்ந்த கடவுளும் இவர்களுக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் செய்யும் ஆற்றலை வழங்குகிறார்கள்.

குறித்த நேரத்தில் சொன்னதை செய்யும் பழக்கம் கொண்ட இவர்கள் வாழ்க்கையில் நினைத்த உயரத்தை நிச்சயம் அடைவார்கள்.

அனுஷம்

அனுஷ நட்சத்திரத்தை தெய்வீக நண்பரான மித்ரா ஆளுகிறார். இந்த நட்சத்திரத்திற்கு சொந்தக்காரர்கள் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் வாழ்க்கையிலும், மனநிலையிலும் எப்பொழுதும் ஒரு சமநிலை இருக்கும்.

இவர்களின் சக்தியால் இவர்கள் எப்பொழுதும் அதிகார மையமாக திகழ்வார்கள்

கேட்டை

கேட்டை நட்சத்திரம் தேவர்களின் அதிபதியான இந்திரனால் ஆளப்படுகிறது.

எந்த சோதனையாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று எதிர்த்து போராடி வெற்றிபெறும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும்.

தன்னை பாதுகாத்துக் கொள்வதை காட்டிலும் எதிரியை தாக்குவதில் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

அனைத்து தடைகளையும் தகர்க்கும் திறன் கொண்ட இவர்கள் தன்னுடைய நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மூலம்

மூல நட்சத்திரம் அழிவின் கடவுளான நிரீதியால் ஆளப்படுகிறது. அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.

இவர்களால் அழிவையே கூட அழிக்க முடியும். அழிவில் இருந்துதான் புதிய சக்திகள் இருக்கும்.

இவர்கள் அழிப்பது புதிய சக்தியின் தொடக்கத்திற்கு வழிவகுக்கும்.

பூராடம்

பூராட நட்சத்திரத்தை அபாஸ் ஆள்கிறார். இவர்களின் சக்தி ஊக்கமளிப்பது ஆகும்.

இவர்களின் மிகப்பெரும் பலம் இவர்களின் மனவலிமை ஆகும்.

கடலையும் கடக்கும் துணிவும், உறுதியும் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.

உத்திராடம்

உத்திராட நட்சத்திரம் விஸ்வதேவர்களால் ஆளப்படுகிறது. சவாலை எதிர்கொண்டு வெற்றிபெறுவதே இவர்களின் அடிப்படை குணமாகும்.

இவர்களால் அடைய முடியாத இலட்சியம் என்று எதுவும் இல்லை.

இவர்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் இவர்களை தேடிவரும். இவர்களிடம் இருக்கும் வெற்றியை எவராலும் பறிக்க முடியாது.

திருவோணம்

திருவோண நட்சத்திரம் காக்கும் கடவுளான விஷ்ணுவால் ஆளப்படுகிறது.

வாழ்க்கையில் சரியான பாதையில் செல்வதன் மூலம் தானும் தன்னை சார்ந்தவர்களையும் முன்னேற்றும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களின் செயல்கள் இவர்களுக்கு நீடித்த புகழை பெற்றுத்தரும்.

இவர்கள் விரும்பாவிட்டாலும் இவர்களின் புகழை பாட ஒரு கூட்டம் எப்போதும் காத்திருக்கும்.

அவிட்டம்

பூமி கோளத்தை பாதுகாக்கும் அஷ்டவசுக்கள் அவிட்ட நட்சத்திரத்தை ஆள்கிறார்கள்.

இவர்களின் பணி சக்தியையும், புகழையும் தருவதாகும். இவர்கள் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் சிறந்தவராக இருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் வெற்றிக்கு காரணமாக இருப்பதுடன் அனைவரின் கவனமும் இவர்கள் மீது இருக்கும்படி நடந்து கொள்வார்கள். அனைவருக்கும் பிடித்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

சதயம்

சதய நட்சத்திரம் வருண பகவானால் ஆளப்படுகிறது. இவர்களின் ஆற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது.

தன் வழியில் வரும் அனைத்து தடைகளையும் தகர்த்து எரிந்து தனது இலட்சியத்தை அடையும் ஆற்றல் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களின் பலவீனங்களே சில நேரங்களில் இவர்களுக்கு பலமாக மாறும்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தை அஜ ஏகாபதி ஆள்கிறார். இவர்களின் பார்வை எப்பொழுதும் இந்த உலக நன்மையை சார்ந்ததாக இருக்கும்.

அதேசமயம் இவர்கள் மனதளவில் தூய்மையானவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் நல்ல எண்ணங்கள் இவர்களை வாழ்க்கையில் உணர்த்தும். நேர்மையும், வாய்மையும் இவர்களின் சிறந்த குணங்களாக இருக்கும்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரம் அஹிர் புதின்யாவால் ஆளப்படுகிறது. இவர் மேகங்களை கட்டுப்படுத்தும் கடவுள் ஆவார்.

இவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சியும், செழிப்பும் சீராக இருந்து கொண்டே இருக்கும்.

இவர்கள் தன்னை சார்ந்தவர்களுக்கு எப்பொழுதும் ஒரு அரணாக இருப்பார்கள்.

ரேவதி

ரேவதி நட்சத்திரம் பூஷனால் ஆளப்படுகிறது. இவர் சூரிய பகவானுக்கு தேவையான ஆற்றலை வழங்குபவர் ஆவார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது அதற்கு காரணம் இவர்களின் குணம்தான்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்