இந்த 5 ராசியையும் எதிர்க்க நினைத்தால் ஆபத்து உங்களுக்குதான்? யாரும் நெருங்கவே வேண்டாம்! ஏன் தெரியுமா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குள்ளும் ஒவ்வொரு குணமுண்டு. அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் சவாலை எதிர்த்து நிற்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சவாலுக்காகவே வாழ்பவர்கள். நல்ல சவால் என்பது இவர்களின் செயல்பாட்டை இருமடங்கு வேகமாக்கும். எனவே ஒருபோதும் இவர்கள் சவாலில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்.

இவர்கள் பயத்தையும், குழப்பத்தையும் நிராகரித்து தங்களின் முடிவில் தைரியமாகவும், உறுதியாகவும் நிற்பார்கள்.

இவர்கள் மற்றவர்கள் எதிர்பார்க்காத அதேசமயம் மற்றவர்களால் செய்ய முடியாத செயல்களை செய்ய எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள்.

சவால் எவ்வளவு பெரியதோ இவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்களால் முடியாது என்று கூறினால் அதனை பொய்யென நிரூபிக்கவே அந்த வேலையை செய்வார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் துணிச்சலுக்காக புகழ் பெற்றவர்கள். எப்போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டுமென்று இவர்கள் நினைப்பார்கள்.

எனவே தான் ஒரு சவாலில் இருந்து பின்வாங்குவது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் இவர்கள் நினைப்பார்கள்.

தனக்கு ஒரு விஷயம் பயத்தை ஏற்படுத்தினால் அந்த பயத்தை எதிர்கொண்டு முறியடிப்பதையே இவர்கள் வெற்றியாகக் கருதுவார்கள். இவர்கள் மற்றவர்களை விட தனக்குத் தானே சவால் விட்டுக் கொள்கிறார்கள். இதனால் இவர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் எதையும் அவசரமாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், பொறுமையாக செய்தாலும் மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தை செய்ய வேண்டும் என்பதில்தான் இவர்களுக்கு முனைப்பு அதிகமாக இருக்கும்.

கடினமான காரியத்தை விருப்பத்துடன் செய்வதே இவர்கள் மகிழ்ச்சிக்கான ரகசியம் ஆகும்.

சவாலை எதிர்கொள்ளும்போது இவர்கள் தொடர்ந்து முயற்சிப்பதுடன் அதன் முடிவில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

பொறுமையாக சென்றாலும் இறுதியில் சவாலை வெல்வது இவர்களாகத்தான் இருக்கும்.

கும்பம்

சவாலில் இருந்து பின்வாங்குவது என்பது இவர்களால் மன்னிக்க முடியாத குற்றமாகும். சவாலில் தோற்பதோ அல்லது பின்வாங்குவதோ இவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைத் தருவதாக இருக்கும்.

ஒருவேளை சவாலில் தோற்றுவிட்டால் தான் என்ன தவறு செய்தோம் என்று கண்டறிந்து அதனை சரிசெய்து மீண்டும் சவாலை முடிக்காமல் விடமாட்டார்கள்.

வெற்றியை அடையும் வரை இவர்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். வெற்றி பெற்றுவிட்டால் ஓய்வெடுக்க மாட்டார்கள், மாறாக புதிய சவாலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதக்காரர்கள் அதேசமயம் உறுதியானவர்கள். சவாலை தொடங்கிவிட்டால் அதனை முடிக்கும் வரையில் தங்கள் பாதையை விட்டு விலக மாட்டார்கள்.

ஒருபோதும் விரக்தியால் இவர்கள் பின்வாங்க மாட்டார்கள். முடிவுகள் இவர்களுக்கு திருப்தி அளிக்கும் வரை இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.

இவர்கள் சவாலை விரும்பாமல் இருக்கலாம், ஆனால் அவை தனக்கு கவனம் மற்றும் உறுதியை வழங்குவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

நல்ல சவால்களை கண்டு அஞ்சுவதைக் காட்டிலும் அதனை எதிர்கொள்வதே சிறந்தது என்று இவர்கள் நம்புகிறார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்