வைரங்கள் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமா? இந்த ராசிகளில் பிறந்தவர்கள் யாரும் அணிய கூடாதாம்

Report Print Kavitha in வாழ்க்கை முறை

வைரமானது விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றாகும், இது தங்கைத்தை விடவும் மதிப்பு கூடியது என சொல்லப்படுகின்றது.

ஜோதிடத்தின் படி வைரம் உங்கள் ராசிக்கு பொருத்தமாக இருந்தால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எனப்படுகின்றது.

அதுமட்டுமின்றி சில ராசிக்காரர்கள் வைரத்தை அணிவது அவர்களுக்கு ஆபத்துகளை உண்டாக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குறிப்பாக அனைவருக்கும் வைரம் பொருந்தும் என்று கூற முடியாது, ஏனெனில் வைரம் அணிந்த பின் சிலர் பல துன்பங்களை அனுபவிப்பார்கள்.

அதில் திருமண தோல்வி, தொழில் நஷ்டம், குடும்பத்தில் விரிசல், ஆரோக்கிய கோளாறு என பல பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் வைரத்தை யார் எல்லாம் அணியலாம்? அணிய கூடாது என பார்ப்போம்.

வைரத்தை அணியலாமா?

வைரமானது உங்களுக்கு பொருத்தமாக இருந்தால், உங்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை, ஆரோக்கியமான உடல், கவர்ச்சிகரமான கண்கள் மற்றும் உங்கள் ஹார்மோன் அமைப்பை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்.

இது உங்கள் ராசிப்படி பொருத்தமில்லாத கல்லாக இருந்தால் இது நிறைய சிக்கல்களைக் கொண்டு வரும்.

இது உங்கள் உடலில் கொழுப்பைஅதிகரிக்கும், உங்களுக்குள் கோப உணர்வைத் தூண்டும், உங்கள் நண்பர்களை உங்களிடம் இருந்து பிரிக்கும், விபத்துக்களைக் கூட ஏற்படுத்தும்.

யாரெல்லாம் வைரம் அணிய கூடாது?

மேஷம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

இவர்கள் வைரம் அணிவது அவர்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தையும், குழப்பங்களையும் உண்டாக்கும்.

யாரெல்லாம் வைரம் அணியலாம்?

கன்னி மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான இரத்தினக் கல் ஆகும்.

இது அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஏற்படுத்தும். மற்ற ராசிக்காரர்கள் சில நிபந்தைகளின் கீழ் வைரத்தை அணியலாம்.

எந்த ராசிக்கு அதிக அதிர்ஷ்டத்தை தரும்?

நீங்கள் 6, 15, மற்றும் 24 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால், எண் 6 ஆல் நிர்வகிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் ராசி அடையாளத்திற்கான அதிர்ஷ்ட கல் வைரம் ஆகும்.

வைர என்பது ஏப்ரல் மாதத்தின் பிறப்புக்கல் ஆகும். ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வைரம் அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்