39 வயதிலும் கரீனா கபூர் கட்டுக்கோப்பாக இருக்க இந்த 8 வகை டயட் திட்டம் தான் காரணமாம்! சீக்ரெட் சொல்லும் கரீனா!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

கரீனா கபூர் பாலிவுட்டை தன் அழகால் கட்டிப்போட்ட ஒரு இந்திய நடிகையாவார்.

இவர் ஒரு திரைக் குடும்பத்தில் பிறந்தவர், அவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, அவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள்.

இவருக்கு 39 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு சிக்கென்ற உடல் வாகு, கவர்ச்சியான தோற்றம், மின்னும் அழகுகின்றது என்று இளமையுடன் வலம் வருகின்றார்.

இது குறித்து அவர் சமூக வலைத்தில் “நான் என் உடல்வாகை சருமத்தை மெறுகேற்ற 8 வகை டயட் உணவுகளை சாப்பிடுகிறேன்” என்று மனம் திறந்துள்ளார்.

அந்தவகையில் 39 வயதில் கரீனா கபூர் எப்படி அழகாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கின்றார் என்று அவரது சீக்ரெட்டை பகிந்துள்ளார். தற்போது அவற்றை பார்ப்போம்.

IANS
காலை உணவு
 • காலையில் எழும் போது இரவில் தண்ணீரில் ஊற வைத்த கிறிஸ்துமஸ் பழம் மற்றும் குங்குமப் பூ சாப்பிடுவாராம்.
 • காலை உணவிற்கு பரோட்டா மற்றும் தொட்டுக்க சட்னி.
 • வயிறு வீக்கத்திற்கு இளநீருடன் சப்ஜா விதைகளை கலந்து குடித்தாராம்.
மதிய உணவு
 • மதிய உணவிற்கு தயிர் சாதம் கடிச்சிக்க அப்பளம்.
 • மதிய உணவு ஸ்நாக்ஸ் ஆக வால்நட் மற்றும் சீஸ்.
 • இடையில் சீரண சக்திக்கு வாழைப்பழ மில்க்ஸேக்.
 • மாலை உணவிற்கு கிச்சடி, தயிர் அல்லது பருப்பு வடை, வெஜிடபிள் புலாவ்.
இரவு
 • இரவு உணவிற்கு பால் அல்லது வாழைப்பழ மில்க் ஷேக்.
 • இரவு உணவிற்கு கரீனா அவர்கள் அவர்களுக்கு பிடித்தமான கிச்சடி, பருப்பு உணவுகள்.
மெல்லுவதற்கு

அடிக்கடி உலர்ந்த திராட்டை, வால்நட் போன்ற ட்ரை ஃபுரூட்ஸ் வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் அதிலிருந்து சுரக்கும் உமிழ் நீர் உள்ளுக்குள் சென்று மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தும். பசி உணர்வைக் கட்டுப்படுத்தும்.

உடற்பயிற்சி
 • உடலை மெருகேற்ற ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை. இந்த வகையான உணவுத் திட்டத்தை மட்டும் 4-5 வாரங்கள் தொடர்ந்து வந்தார்.
 • எடையை கட்டுக்குள் கொண்டு வர வெகுநேரம் உடற்பயிற்சி செய்யவில்லை. ஜிம்மிற்கு போகவில்லை. எல்லாம் இந்த 8 நாள் டயட் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்