உறக்கத்திலிருந்து விரைந்து விழிப்பது எப்படி?

Report Print Abisha in வாழ்க்கை முறை

பல நாட்கள் காலையில் எழுந்ததும், கொஞ்சம் நேரத்திற்கு முன் எழுந்திருக்கலாம் என்று எண்ணுவோம். ஆனால், அது கனவிலும் நடக்காத ஒன்றாகவே பலருக்கும் இருக்கும். அத்தகைய சூழலில், நாம் எப்படி விரைவில் உறக்கம் விழிப்பது என்ற கேள்விக்கான வழிகள்...

மூளைக்குச் சொல்லுங்கள்

நாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான தீர்மானத்தை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான். நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை அடித்து எழுப்பி விடும்.

சூரிய ஒளியும் எழுப்பும்

உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திரிக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும். அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம்.

அடிக்கடி மாற்றம் கூடாது

தினமும் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக 10 மணி அலுவலகத்துக்கு 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று மனதில் நினைத்து கொண்டால், அது வேலைக்காகாது. எனவே, தினமும் காலை 6 மணிக்கு எழுந்திரிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டால் உங்களுக்கு எந்த அலாரமும் தேவைப்படாது. உங்கள் உடல் இயக்கமே 6 மணிக்கு உங்களை எழுப்பிவிடும். அதே சமயம் வார விடுமுறை தினத்தில், அதிகம் நேரம் உறங்குவதை தவிர்க்கவும்.

அலாரத்தின் ஒலியும் அவசியம்

பொதுவாகவே அலாரத்தின் ஒலி மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக தட்டி எழுப்பும் வகையில்தான் இந்த அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல இருக்கக் கூடாது.

மேலும், அலாரத்தின் ஒலியைக் கேட்டு மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது உறக்கம் கலைவதுதான் நல்ல வழியாகும்.

செய்யச்கூடாதவை

தூங்கி எழுந்ததுமே அலறி அடித்துக் கொண்டு வேலைகளை செய்ய ஓடக் கூடாது. உடல் உறக்கத்தில் இருக்கும் போது நமது ரத்த ஓட்டத்தின் வேகம் மாறுபடும். எனவே எழுந்து சில நிமிடங்கள் உட்கார்ந்து நிதானம் அடைந்தபிறகு எழுந்து செல்லலாம்.

காற்றோட்டமான இடத்தில் உறக்கம்

இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழுந்திரிக்க முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டால் காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம்.

ஒரு பணியை விரைந்து முடிக்க முன்கூட்டியே திட்டமிடும் நாம், அதற்கு உறக்கம் எழும் செயல் மிக அவசியமானது. எனவே அந்த வகையில், உறக்கத்தை கட்டுப்படுத்தி விரைவாக விழித்தெழுவோம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...