உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பலவித நோய்கள் அண்டலாம்!... அலட்சியம் வேண்டாம்

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

கோடைகாலம் வந்து விட்டது. தண்ணீர் சரியாக குடிக்கவில்லையென்றால் உடல் வறட்சி ஏற்படும்.. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மனித உடல் 60% நீராலானது. நம் உடலிலிருந்து சிறுநீர், வியர்வை, எச்சில் துப்புவது, கண்கள் இவற்றிலிருந்து நீர் வெளியேறுகிறது.

அதிகமாக வெயிலில் வேலை செய்பவர்களுக்கு அதிகளவில் வியர்வை வெளியேறும். இதனால் அவர்களுக்கு உடல் நீர் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிக்கடி தாகம் ஏற்பட்டாலோ, உதடுகள் வறட்சி அடைந்தாலோ நீர்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்.. எனவே, அடிக்கடிக்கு தண்ணீர் குடிக்க பழகிக்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு மனிதன் 8 டம்ளர் நீராவது குடிக்க வேண்டும். அப்படி குடிக்காவிட்டால் வரும் பிரச்சினைகள் பாருங்கள்.

தண்ணீர் சரியாக குடிக்காவிடில் வரும் பாதிப்புகள்

 • உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால் இரத்த அழுத்தம் குறைந்து, அடிக்கடி மயக்கம் ஏற்படும். திடீரென உட்கார்ந்து எழும் போது தலைச்சுற்றல் வரும்.

 • மூட்டுகளில், தசைகளில் வலி ஏற்படும்.

 • மூட்டுகளில் உள்ள தசை நார்கள் 80 சதவீதம் நீரால் நிறைந்திருக்கும். உடலில் நீர் சத்து குறையும் பொழுது வலியும் வீக்கமும் ஏற்படும்.

 • தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரின் நிறம் அடர்த்தியான மஞ்சள் மாறி கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவரும்.

 • உடல் பருமன் அதிகரிக்கும்.

 • ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும்.

பிரச்சினைகளிலிருந்து விடுபட

 • ஒருநாளைக்கு நிறைய தண்ணீர் குடிங்கள்.

 • மதுபானங்கள் குடிப்பதை தவிருங்கள்.

 • சத்தான நீர் சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 • ஒருவர் 8 மணிநேரத்திற்கும் மேல் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

 • புதினா, எலுமிச்சை, ஆரஞ்சு, மாதுளை மற்றும் கற்றாழை சாறுகளை அருந்துவதும் நல்லது.

 • அதிக நீர் குடிப்பதன் மூலம், மூட்டு இணைப்புகள், கண்கள், உள்ளுறுப்புகள் தேய்மானம் அடையாமல், உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்