பெண்களை அச்சுறுத்தும் மார்பக புற்றுநோய்: அலட்சியம் வேண்டாம்... !

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

புற்றுநோய்களில் பெண்களை அதிகளவில் தாங்கும் நோய் மார்பக புற்றுநோய்.

இந்தியாவில் மார்பக புற்று நோயால் 60 சதவீதம் பேர் இந்நோய் முற்றிய நிலையில் தான் அதனை தெரிந்து கொள்கிறார்கள். இதனாலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது.

உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே இந்நோய் ஏற்படுவதற்கு காரணமாகிறது. புற்றுநோய்க்கட்டியை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

இந்தியாவில் 2018ம் ஆண்டு மட்டும் ஒன்றரை லட்சத்திற்கு மேல் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். ஆரம்பகால அறிகுறிகள் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டால் இந்நோயிலிருந்து குணமடையலாம்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு சென்றுதான் மார்பகங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்றில்லை. சில எளிய கருவிகளின் மூலம் பெண்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.

மார்பக புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது

 • 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதித்துவந்த மார்பக புற்றுநோய் இப்போது 25க்கு மேற்பட்ட பெண்களையும் பாதிக்க ஆரம்பித்து விட்டது.

 • உணவுக் கட்டுப்பாடு இல்லாதமல் நாளுக்கு நாள் உடல் எடை அதிகரித்து செல்வர்களுக்கு வர வாய்ப்பு உண்டு.

 • தாமதமான திருமணம் செய்து கொண்டாலோ, தாமதமாக குழந்தை பெற்று கொண்டாலோ, பிறந்த குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் தராமல் இருந்தாலோ இந்நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

 • கட்டுப் படுத்தப்படாத அதிகப்படியான நீரிழிவு, புகை, மது பழக்கம் கொண்டவர்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக உலக புற்றுநோய் மையம் எச்சரிக்கை விடுவித்துள்ளது.

 • 40 வயதுக்கு முன்கூட்டியே இந்தப் பிரச்சனைகள் வந்தது. ஆனால் இப்போது 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பாதிக்க ஆரம்பித்து விட்டது. இதற்கு உணவுப் பழக்க முறைகளும் காரணமாக அமைகின்றன.

பெண்கள் எப்படி தங்களை பரிசோதனை செய்ய வேண்டும்

 • மார்பகத்தில் வலி இல்லாத சிறு கட்டி இருக்கிறதா என்று தடவி பார்க்க வேண்டும்.

 • மார்பகங்களில் வீக்கம் ஏதேனும் இருக்கிறதா என்று பாருங்கள்.

 • மார்பகத்தின் தோல் பகுதி சுருங்கி இருக்கிறதா என்று கவனியுங்கள்.

 • முலைக்காம்புகள் உள்ளே அமிழ்ந்து இருந்தாலோ அங்கு புண், நிறமாற்றம் இருந்தாலும் மருத்துவரை அணுகுங்கள்.

 • கைகளை உயர்த்தி இருக்கும் போது முலைக்காம்புகளில் இரத்தம், நீர் போன்ற திரவம் வெளிப்படுகிறதா என்பதை கவனியுங்கள்

 • படுக்கும் போது இரண்டு மார்பையும் உள்ளங்கைகளால் தடவி இலேசாக அழுத்தி பாருங்கள்.

 • வட்ட வடிவில் மார்பகம் முழுவதையும் அழுத்தி பார்க்கும் போது கட்டிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதைப் பாருங்கள்.

புற்றுநோய் வந்துவிட்டா இறப்புதான் என்று அச்சம் கொள்ள வேண்டாம். மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து மருத்துவரை அணுகினால் நிச்சயம் குணமடையலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்