அலர்ட்! அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் வரும் பேராபத்துக்கள்

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

நம் தாத்தா, பாட்டிகள் வாழ்ந்த காலத்தில் உடற்பயிற்சியாக எந்த உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் இயற்கையான உணவுகளை சாப்பிட்டார்கள். தங்களின் வேலைகளை தாங்களே செய்து கொண்டார்கள்.

அந்த காலத்தில் மின்சாரம் கிடையாது. எந்த எலக்ட்ரானிக் பொருட்களும் இல்லை. அதனால் அவர்கள் செய்யும் வேலைகளே அவர்களுக்கு உடற்பயிற்சியாகவும் இருந்தது. உடலும் ஆரோக்கியமாக இருந்தது.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மனிதன் காலத்திற்கு ஏற்றாற்போல் ஓட ஆரம்பித்து விட்டான். உணவு முறைகளிலும் மாற்றம் வந்துவிட்டது.

எலக்ட்ரானிக் பொருட்கள் வந்துவிட்டதால் வீட்டில் இருக்கும் பெண்கள் கூட உடல் அலுப்பு இல்லாமல் வேலையை முடித்துவிடுவார்கள்.

பழக்க வழக்கங்களில் மட்டும் இல்லை. தொழிற்துறையிலும் மாற்றம் வந்துவிட்டது. கணினி இல்லாமல் இப்போதெல்லாம் எந்த தொழில் இயங்குவதில்லை.

அதனால் பெண்களும் சரி.. ஆண்களும் சரி… ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்காக வேலை செய்து வருகிறார்கள். நின்று பார்க்கும் வேலையை விட உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் தான் அதிகம்.

சராசரியாக 8 மணி நேரம் ஒரே இடத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர்.

 • ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடல்பருமன் அதிகரித்து கொண்டே போகும். தொப்பையும் போட வாய்ப்புள்ளது.

 • வாழ்வியல் முறை சார்ந்த நோய்கள் நம்மை தாக்கும்.

 • உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி ஏற்படும். உடலில் உள்ள தசைகள் எந்த ஒரு அசைவும் இல்லாமல், நீண்ட நேரம் உட்கார்வதால் முதுகு வலி ஏற்படுகின்றது.

 • ஒரே இடத்தில் அமர்வதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போபுரோட்டீன் அளவு குறைந்து விடும்.

 • லிப்போபுரோட்டீன் உடலுக்கு ரொம்ப நல்லது. இது குறைந்தால் மனிதன் உடலில் பல பிரச்சினைகள் வரும்.

 • உடலில் உள்ள இன்சுலின் அளவு குறைந்துவிடும்.

 • உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், ஒரு நாளைக்கு நான்கு வேளையாக தினசரி உணவை பிரித்து சாப்பிட வேண்டும்.

 • தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைக்கிறது.

 • நாட்டுச் சர்க்கரை, தேன், மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

 • நமது உடல் சுறுசுறுப்பாக இருக்க தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சைச் ஜூஸ் குடிக்கலாம்.

 • ஒரு நாளைக்கு 6 முதல் 8 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைய உதவுகிறது.

 • குறைந்தது 6 முதல் 8 மணி நேர தூங்க வேண்டும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்