மூக்கின் நுனியில் இருக்கும் கரும்புள்ளிகளை விரட்டியடிக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

என்னதான் முகத்தை அழகாக வைத்துக்கொண்டாலும் மூக்கின் மேல் இருக்கும் கரும் புள்ளிகள் முக அழகையையே கெடுத்துவிடும்.

சில பேருக்கு மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் போக்க அடிக்கடி பார்லர் போய் பேஷியல் செய்து கொள்வார்கள். ஆனால், அவை மறுபடியும் வந்துவிடும். இதனால் பல பேருக்கு என்ன செய்வதென்றே தெரியாது.

அப்படிப்பட்டவர்களுக்கு இதோ சூப்பர் டிப்ஸ்,

 • 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல முகத்தில் அப்ளை செய்து, மசாஸ் செய்து முகத்தை மெதுமெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் போகும்.
 • ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சரியாகும்.
 • கிரீன் டீ இலை டீ குடித்ததும், தூக்கி போடாமல் கொஞ்சம் நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால் சருமத்தின் மென்மைத்தன்மை தரும். தினமும் இருமுறை செய்தால் போதும்.
 • 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் மாதிரி கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 • முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட்மாதிரி செய்து, முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக மின்னும்.
 • கோதுமை மாவை சலித்து அதில் கிடைக்கும் தவிடை எடுத்து, ஒரு டீஸ்பூன் சர்க்கரை அரைடீஸ்பூன் பசுந்தயிரை குழைத்து முகத்தில் தேய்த்து தண்ணீரால் கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும். மூக்கின் நுனியில் கீழிருந்து மேலாக தேய்க்கவும். வேகத்தில் தேய்க்க கூடாது. அப்படி தேய்த்தால் சருமம் பாதிப்பாகும். பொறுமையாக தேய்த்தால் இருந்தால் கரும்புள்ளிகள் வேரோடு வெளியேறும்.
 • 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து மூக்கின் நுனியின் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் மறையும்.
 • தேன், எலுமிச்சைச்சாறு முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கும். எலுமிச்சைசாறில் தேன் கலந்து மூக்கின் மேல் படர்ந்திருக்கும் கொழுப்பு புள்ளிகளை நீக்கி பொலிவு கொடுக்கும்.
 • மெல்லிய துணியில் மூக்கின் நுனியை அழுந்த துடைத்து எடுத்தால் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் எதுவாக இருந் தாலும் நீங்கி முகம் பிரகாசிக்கும்.
 • நாட்டு தக்காளியை மிக்ஸியில் மைய அரைத்து, கோதுமை ரவை 2 டீஸ்பூன் கலந்து மூக்கின் நுனியில் கீழிருந்து மேலாக ஸ்க்ரப் செய்யலாம்.ஒரு மணி நேரம் கழித்து காய்ந்ததும் வெந்நீர் நனைத்த பஞ்சை கொண்டு அழுந்த துடைத்து எடுத்தால் கரும்புள்ளிகள் வேரோடு வந்திருக்கும்.
 • கோதுமை ரவையை அழுத்தி ஸ்க்ரப் செய்யும் போது கவனமாக செய்வது நல்லது. கோதுமை ரவை வேண்டாம் என்று தவிர்ப்பவர்கள் ஓட்ஸை பொடி செய்து பயன்படுத்தலாம்.
 • ஒவ்வொரு முறை மசாஜ் செய்த பிறகும் கற்றாழை கொண்டு மசாஜ் செய்து வந்தால் சருமத்தின் இருக்கும் அழுக்குள், கரும்புள்ளிகள் மறையும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்