நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்!... எப்படி செய்வது?

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை
1703Shares

எந்த ஒரு காய்ச்சல் வந்தாலும் வீட்டில் பெரியவங்க, முதலில் ரச சாப்பாடு கொடுங்கப்பா என்று சொல்வார்கள். ஏன்னா… ரசத்தில் நோய்களை எதிர்ப்பு போராடும் சக்தி இருக்கிறது.

வெறும் சாதத்தில் மட்டும் சேர்த்து சாப்பிட்டால் போதாது. சூப் மாதிரியும் ரசத்தை நீங்கள் சாப்பிடலாம்.

இந்த ரசத்தில் வேறு எந்த விதமான பருப்பு வகைகளும் சேர்க்காமல் செய்யக் கூடியது.

மிளகு ரசம், லெமன் ரசம் மற்றும் கொள்ளு ரசம் ஆகும். இதில் தக்காளி ரசம் அதிகமாக செய்வதோடு உடலுக்கும் நல்ல மருந்தாகும்.

ரசம் என்பது ஒரு எளிதான விரைவில் செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி ஆகும்.

பூண்டு, மிளகு ரசம் எப்படி செய்யலாம்?

தக்காளி – 3

தண்ணீர் - 3 கப்

பூண்டு (தோலுடன்) - 10 பல்

மிளகு - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

புளி - 1/4 லெமன் அளவிற்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 10

பெருங்காயம் - கொஞ்சம்

கொத்தமல்லி இலை(நறுக்கியது) - ½ கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)

முதலில் தக்காளியை எடுத்து கொண்டு அதன் மேல் பகுதியை நீக்கி கொள்ளுங்கள்.

2-3 செங்குத்தான துண்டுகளாக தக்காளியை வெட்டி கொள்ளுங்கள்.

பின்னர் மிக்ஸி ஜாரில் 10 பூண்டு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் 5, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும், அரைக்கும்போது 3 சுற்று சுற்றி கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸியில் முதலில் தக்காளியை ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் பாத்திரம் காய்ந்ததும் கொஞ்சம் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்த மிளகு ரசப்பொடியை சேருங்கள், தேவையானால் கொஞ்சம் மஞ்சள் பொடியை சேருங்கள்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளியை எடுத்து சேர்த்து மிதனமான தீயில் வதக்குங்கள். பின்னர், கரைத்து வைத்த புளியுடன், தேவையான அளவு தண்ணீர் சேருங்கள். நறுக்கிய கொத்தமல்லியை தூசி ஒரு கொதி வருவதற்குள் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

தேவைப்பட்டால் கடைசியாக கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் இப்படி ரசத்தை செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எந்த வைரஸிலிருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்