தினமும் சமையலில் இதை சேர்த்துக்கோங்க!... நன்மைகளோ ஏராளம்

Report Print Gokulan Gokulan in வாழ்க்கை முறை

சமையலில் அதிகமாக மிளகை சேர்த்துக் கொள்வது நல்லது. சில பேர் பொங்கல் சாப்பிடும்போது மிளகை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிடுவார்கள். இனி அப்படி செய்யாதீங்க. நோய்களை எதிர்த்து தடுக்கும் சக்தி மிளகுக்கு உண்டு.

சளி, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை போக்கும் ஆற்றல் கொண்ட மருந்து மிளகு. செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுவதற்கு மிளகின் பங்கு மிக அவசியம்.

 • சூடுதண்ணீரில் 10 மிளகை இடித்து அதனுடன் கொஞ்சம் மஞ்சளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் சரியாகும்.
 • ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
 • மிளகுடன் கொஞ்சம் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
 • 15 துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளி கரைந்து போகும்.
 • ஒரு ஸ்பூன் நெய்யில் 6 பூண்டு பல்லைப் போட்டு வதக்கி சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். நுரையீரல் பம்பந்தப்பட்ட நோய் குணமாவதுடன், சளி, இருமலை கட்டுப்படுத்தும்.
 • கருமிளகு டீ குடித்து வந்தால் தொண்டைவலியை குணப்படுத்தும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்து 15 நிமிடங்கள் பிறகு குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் சரியாகும்.
 • பாலில் மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது. சளியை போக்க பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் பூரண குணம் கிடைக்கும்.
 • மிளகின் காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள் வராமல் தடுக்கின்றது.
 • புகை, மது போன்ற போதை பொருட்கள் உடலுக்கு தீமையை விளைவிக்கும். இப்பழக்கம் கொண்டவர்கள் இவற்றை பயன்படுத்தும் நேரத்தில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று வந்தால் அந்த பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம்.
 • இன்றைய காலக்கட்டத்தில் நாம் உண்ணும் உணவுகளில் விஷத்தன்மை நிறைந்துவிட்டன. இதனால் பெரும்பாலோனோருக்கு மலட்டு தன்மை அதிகரித்துவிட்டது. மிளகை தினந்தோறும் மலட்டுத்தன்மை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மையை போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
 • வாயுத்தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் சிலருக்கு வாயுக்கோளாறுகள் ஏற்படும். மிளகை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் வாயு கோளாறுகள் நீங்கும்.
 • நார்ச்சத்தில்லாத உணவுகள், மாமிச உணவுகளை அதிகளவில் உண்பவர்களுக்கும் வயிற்றில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் சாப்பிடும் உணவில் மிளகு அடிக்கடி சேர்த்து கொண்டு வந்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
 • சளி மற்றும் இருமல் மழை மற்றும் குளிர்காலங்களில் பலருக்கும் ஜலதோஷம் தொற்றி சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டு அவதியுறுகின்றனர். இக்காலங்களில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று சிறிது வெண்ணீரை அருந்தினால் இத்தொல்லைகள் நீங்கும்.
 • தினமும் 5 மிளகை வெறும் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் வாய் ஈறுகளில் வீக்கம், பல்சொத்தை போன்றவற்றை தடுக்கும்.
 • தினந்தோறும் சில மிளகுகளை மென்று சாப்பிட்டு வருவதால் பொடுகு தொல்லை நீங்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...